இயேசுவுக்கே மகிமை
திராட்சை இரசம் தன் வரலாறு கூறுதல்
திராட்சை ரசமாகிய(மது) நான் என் வரலாறை மிகுந்த வருத்ததுடன் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ளுகிறேன். காரணம் என்னால் கெட்டுப்போனவர்களும், கெட்டுப்போன குடும்பங்களும் ஏராளம், ஏராளம். அப்படியிருக்க நான் என் வரலாறை எப்படி சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்ளமுடியும்? முதல் முதலாக நீங்கள் என்னைப் பற்றி ஆதியாகமம் 9 : 21 ஆம் அதிகாரத்தில் தான் பார்க்கமுடியும். அதற்கு முன்பு வரை நான் இருந்ததில்லை. முதல் முதலாக என்னை அருந்திய துரதிர்ஷ்ட்டசாலி நோவா தான்.
20. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
21. அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
நோவா ஜலத்தினால் ஏற்ப்பட்ட மிகப் பெரிய அழிவையும், தேவன் பேழையை அடைத்ததினால் தன் உறவினர்களின் மரண ஓலத்தை கேட்டபின்பும் அவர்களை காப்பாற்ற முடியாமற் போனதினிமித்தமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான். இந்த பேரழிவுக்கு முன்புவரை தேவனோடு சஞ்சரித்த நோவா தன்னுடைய மன உளைச்சலுக்கு தேவனுடைய ஆறுதலை தேடாது போதை வஸ்துவாகிய என் மூலம் தீர்வு காண முன்வந்தது மிகப்பெரிய தவறு. இதன் மூலம் கானான் என்ற ஒரு சாபத்தின் சந்ததி உருவாக காரணமாயிற்று.
24. நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:
25. கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
26. சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
இதுபோலவே ஒரு மாபெரும் அழிவைக் கண்டவன் லோத்து, இவனும் சோதோம் கொமரா பட்டணம் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்பட்டதை கண்ட போது மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகி தன் குமாரத்திகளால் மதுவாகிய எனக்கு அடிமையானான். அந்தோ பரிதாபம் அம்மோன், மோவாப் என்னும் இரண்டு சபிக்கப்பட்ட சந்ததிகள் உருவாக இது காரணமானான்.
32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
மதுவாகிய என்னை நோவாவின் ஜலப்பிரளயத்த்திற்கு முன்பு வரை யாரும் தயாரிக்க முடியாது. காரணம் தேவனின் சிருஷ்டிப்பிலே இந்த பூமியில் சூரிய ஒளி நேரடியாக படாதவாறு தேவன் படைத்திருந்தார். அதாவது பனிபடர்ந்த ஒரு படலம், அந்த படலம் சூரிய ஒளியின் வெப்பம் பூமியை தாக்காதவாறு பாதுகாத்துக்கொண்டிருந்தது. அதாவது இந்த பூமி ஏர் கண்டிஷன் வைக்கபட்டிருந்த குளிரூட்டப்பட்ட ஒரு அறையைப் போன்றிருந்தது.
ஆதியாகமம் 7:11 மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.
தேவன் பூமியை ஜலத்தினால் அழித்தபோது வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டது, அப்போது வானத்தின் கீழ் இருந்த பனிபடர்ந்த அந்த போர்வை உருகி தண்ணீராய் இந்த பூமியை அழிக்கும்படி வந்தது. எனவே தேவன் இந்த பூமிக்குக் கொடுத்திருந்த பாதுகாப்பை பூமியானது இழந்து போனது. ஜலப்பிரளயத்துக்கு பின்பு சூரிய ஒளி நேரடியாக இந்த பூமியை வந்தடைந்தது. எனவே பூமின் குளுமை மாறியது.
திராட்சையை பிழிந்து அதன் ரசத்தை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் அது ஜூஸ் ஆக தான் இருக்குமே ஒழிய அது மதுவாக மாறாது. மாறாக அந்த ரசத்தை சாதாரண அறை வெப்பத்தில் வைக்கும்போது அது புளித்து மதுவாக மாறுகிறது . ஆகவே தான் ஜலப்பிரளயத்துக்கு முன்பு வரை மதுவாகிய என்னை யாரும் தயாரிக்க முடியவில்லை. நான் இந்த பூமியில் பிறக்க மனிதன் செய்த பாவமே காரணமாகும்.
இன்று தான் விஞ்ஞானிகள் புவி வெப்பமாவதை அறிந்திருக்கிறார்கள், ஆனால் இது ஆதியாகமம் 9 வது அதிகாரத்திலேயே ஆரம்பித்துவிட்டது. அதாவது சுமார் 5000 ம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. மட்டுமல்ல மனிதனுடைய ஆயுள் நாட்கள் குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சூரிய கதிர்களின் வெப்பமேயாகும். நோவாவின் ஆயுள் நாட்கள் 29. நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
இதன் பின்பு நோவாவின் சந்ததிகளாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வாழ்நாட்கள் 500 க்கும் சற்று அதிகமாயிருந்தது. இதுவே மோசேயினுடைய நாட்களில் 120 ஆக குறைந்து தற்ப்போதைய நாட்களில் 70 அல்லது பலத்தின் மிகுதியால் 80 என்று ஆகிவிட்டது.
பொதுவாக வாகனத்தின் பின்புறம் மற்றும் அபாயத்தை குறிக்கும் இடங்களிலெல்லாம் சிவப்பு நிறத்தால் ஆன விளக்குகளையே பயன்படுத்துகின்றனர். அபாயத்தின் நிறம் சிகப்பு என்பதை நீங்கள் யாவரும் அறிந்ததே, ஆகவே என்னுடைய ரத்த வருணமான சிகப்பு நிறத்தை பார்க்கும்போது நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் நான் அபாயமானவனென்று.
நீதிமொழிகள் 23
29. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
31. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
32. முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
நீதிமொழிகள் 31
4. திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
5. மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
ஆகவே தான் பரிசுத்த வேதம் மதுவாகிய எனக்கு அடிமையாகாதிருக்கும்படி உங்களுக்கு போதிக்கிறது தீத்து 2:3 மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்
குடி குடியை கெடுக்கும், குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும்.
இயேசுவின் நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment