Wednesday, March 24, 2010

பொன்னைப் போல

இயேசுவுக்கே மகிமை

பொன்னைப் போல

நீதிமொழிகள் 27:21 வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

பொன்னை வெட்டி எடுக்கும்போது அதில் பலவிதமான அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அவற்றை அதிலிருந்து நீக்க வேண்டுமேயானால் அதை அக்கினிக்கு உட்படுத்தி புடமிட வேண்டும். மேலும் அதிலுள்ள களிம்பை நீக்க வேண்டுமானால் அதை சுத்தியால் அடிப்பார்கள். இப்படி பலமுறை செய்யும் போது அந்த பொன்னுக்கு மிகவும் வலிக்கும், ஆனாலும் பொன்னிலுள்ள அழுக்கும், களிம்பும் நீங்குவதால் அந்த பொன் ஜொலிக்க ஆரம்பிக்கிறது. இப்போது தான் அந்த பொன் ஆபரணங்களாக வடிவமைக்கப் பட்டு அநேகருக்கு பயன்படுகிறது.

இதுபோலவே ஒரு மனிதனை தேவன் உலகத்திலிருந்து எடுக்கும்போது அவனுக்குள் உலகத்தின் பாவங்களும், குடிப்பக்கங்களும், விக்கிரக ஆராதனைகளும் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அதை அவனை விட்டு நீக்க வேண்டு மேயானால் தேவன் அவனை சிலப் பாடுகளுக் குட்ப்படுத்துகிறார். ஆகவே தான் பக்தன் யோபு சொன்னார் யோபு 23:10 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

ஒரு மனிதனை பாடுகளுக்கு உட்படுத்தும்போது தான் அவனுடைய நேர்மை, பொறுமை, சகிப்புத் தன்மை இவைகளை அந்த மனிதனே அறிந்துகொள்ள முடியும். தேவன் ஒரு மனிதனை புடமிடுவது அவர் தெரிந்து கொள்ள அல்ல, நாம் நம்மைப் பற்றி அறிந்து கொள்ளவே.

நீதிமொழிகள் 17:3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.

வெள்ளிக்கு ஒரு விதமான புடம், பொன்னுக்கு இன்னொரு விதமான புடம் அதுபோல ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்கும் ஒரு விதமான புடம். அதாவது ஒரு சிலருடைய பொறுமையை அவர்களே தெரிந்து கொள்ள அவர்களுடைய Boss ம், வேறு சிலருடைய பரிசுத்தத்தை அறிந்து கொள்ள சில மாடர்ன் டிரஸ் அணிந்த பெண்களும், ஒரு சிலருடைய நேர்மையை அறிந்து கொள்ள அவர்களுடைய மிகக் குறைந்த சம்பளமும், ஒரு சிலருடைய சகிப்புத் தன்மையை அறிந்து கொள்ள அவர்களுடைய மனைவியோ அல்லது அவர்களுடைய பிள்ளைகளோ ஏற்ப்படுத்தப் பட்டிருக்கலாம்.

யோபு 28:1 வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.

இவற்றில் பொன் அக்கினியில் போடப்பட்டாலும் அது எரிந்து போவதில்லை. ஆனால் அது பிளாஸ்டிக்காகவோ, விறகாகவோ அல்லது வைக்கோலாகவோ இருந்தால் எரிந்து போய்விடும். பொன்னோ தீயின் அனல் அதிகமாக, அதிகமாக இன்னும், இன்னும் அதிகமாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.

ஒருசிலர் பரிசுத்தமாக, நேர்மையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதைப் பார்த்து பொறுக்காத சில Boos கள் அல்லது அவர்களுடைய உடன் பணிபுரியும் சக நண்பர்கள் இவர்களுக்கெதிராக இல்லாத பொல்லாதவைகளை சொல்லி இவர்களுக்குக் கெட்டபெயருண்டாகும் படி செய்துவிடுவார்கள். சில பெண்கள் பரிசுத்தமாய் வாழ விரும்பினால், அவர்களுடைய Boos களுடைய தவறான விருப்பங்களுக்கு ஒத்துப் போக மறுத்தால் அவர்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வுகளை தடுத்து, இவர்களை காட்டிலும் திறமை குறைந்தவர்களுக்கு கிடைக்க செய்து விடுவார்கள். ஆனாலும் தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. எந்நாளும் அப்படியிருக்க விடமாட்டார்.

சங்கீதம் 66:12 மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.

ஆம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அப்படித்தான் பிரச்சினை வந்தது. ஆனால் அவர்கள் பொன்னாய் இருந்தபடியால் எரிந்து போகவில்லை மாறாக ஜொலித்தார்கள். ஆனால் வைக்கோல்கள் போன்ற சிம்சோன், சாலமோன் போன்றவர்கள் எரிந்து போனார்கள்.

.தானியேல் 3:21 அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.


22.
ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.

23.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.

24.
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.

25.
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

26.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.

27.
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

28.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

11. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

12.
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

13.
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

14.
அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.

15.
ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்;

ஏசாயா 43:2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment