இயேசுவுக்கே மகிமை
முந்தின ஆதாம் - பிந்தின ஆதாம் ஓர் ஒப்பீடு (பாகம் - II)
முந்தின ஆதாமுக்கு வந்த சோதனை பழத்தை சாப்பிடும்படி, அதுபோலவே பிந்தின ஆதாமாம் இயேசுவுக்கு வந்த சோதனை அவர் உபவாசத்தை முடித்த பின் கல்லுகளை அப்பம்களாக்கி சாப்பிடும்படி. இரண்டு பேருக்கும் வந்த சோதனை சாப்பாட்டிலேயே. ஆனால் முத்தின ஆதாமுக்கு சாப்பிடகூடாது என்று கட்டளை இருந்தும் மீறி சாப்பிட்டு பாவத்திற்கு உட்பட்டான். ஆனால் பிந்தின ஆதாமாம் இயேசுவுக்கு எந்தவித கட்டளை இல்லாதிருந்தும் அவர் பிசாசை ஜெயித்தார். முந்தின ஆதாம் ஒரே ஒரு மரத்தின் கனியை தவிர மற்ற எல்லா மரத்தின் கனியை புசித்து திருப்தியாய் இருந்த போதும் தோற்று போனான். பிந்தின ஆதாமாம் இயேசுவோ 40 நாட்கள் உபவாசமிருந்த பின்பும் ஜெயித்தார். முந்தின ஆதாம் சகல வசதிகளோடு கூடிய ஏதேன் தோட்டத்தில் தன் துணையான மனைவியோடு இருந்தபோதும் தோற்று போனான். பிந்தின ஆதாமாம் இயேசுவோ வனாந்தரத்தில் தனிமையாய் விடபட்டிருந்த போதும் ஜெயித்தார்.
கிறிஸ்துவில்அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment