Friday, March 5, 2010

பாவத்தின் ஓர வஞ்சனை – பாகம் III

இயேசுவுக்கே மகிமை


பாவத்தின் ஓர வஞ்சனைபாகம் III

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவின் மிக பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சி. பல கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து வந்து மிக பெரிய மலையிலிருந்து கீழ்நோக்கி பாய்ந்து நீர்வீழ்ச்சியாக அநேகருடைய மனதை மகிழ்ச்சியாக்குகிறது. ஒரு நாள் இந்த நீர்வீழ்ச்சிக்கு மேலாக பருந்து ஒன்று வட்டமடித்துகொண்டிருன்தது. அப்போது அதன் கூர்மையான கண்களில் அந்த ஆற்றின் தண்ணீரின் மேல் மாட்டின் அழுகிப்போன பிணம் ஒன்று மிதந்து கொண்டு போவதை பார்த்தது. நல்ல இரை கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் அந்த மிதந்து கொண்டு வந்த பிணத்தின் மேல் அமர்ந்து ரசித்து, ருசித்து சாப்பிட ஆரம்பித்து. அதேவேளையில் அது தன் உயிரின் மேல் இருந்த ஆசையின் காரணமாக அடிக்கடி அந்த ஆறு முடிந்து நீர்வீழ்ச்சியாக மாறும் அந்த கடைசி பகுதி வந்ததா என்று எட்டி எட்டி பார்த்தது. இன்னும் சற்று தூரம் இருக்கிறது என்று ஒவ்வொரு தடவையும் இன்னும் கொஞ்ச நேரம் சாப்பிடலாம் என சாப்பிட்டு கொண்டிருந்தது. கடைசியாக சில அடி தூரம் மட்டுமே இருந்ததை அது கவனித்துவிட்டது. இனி ஆபத்துதான் என்பதை அறிந்தவுடம் உயிர் தப்பும் படி திடீரென பறக்க முயற்சித்தது. அந்தோ பரிதாபம், அதன் கூரிய நகங்கள் அழுகிப்போன பிணத்தினுள் மிக ஆழமாய் பதிந்திருந்தபடியால் அதனால் உடனடியாக பறக்க முடியாமல் மிக உயரமான அந்த மலையிலிருந்து அந்த வெள்ளத்தின் ஓட்டத்திலேயே அழுகிய பிணத்தோடு கூட விழுந்து மாண்டுபோனது.

சிம்சோனும் அப்படிதான் ஒவ்வொரு தடவையும் தவறு செய்தபோதும் எபோதும் போல உதறி போட்டு தப்புவேன் என நினைத்தான். ஆனால் கடைசியில் என்ன நடந்தது என நாம் யாவரும் அறிந்ததே.

நியாயாதிபதிகள் 16:20 அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

அதுபோல நாமுங்கூட அஜாக்கிரதாய் இராமல் நம்முடைய ஆத்துமாவை காத்துகொள்வோம். நித்திய பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்போம்.

நீதிமொழிகள் 29:1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment