Friday, March 5, 2010

திருமண அழைப்பிதழ்

இயேசுவுக்கே மகிமை

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது (எபி 13:4)

திருமண அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்,

தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி நினையாத வேளையில் நடைபெறும்

பரலோகில் வசிக்கும் பிதாவாகிய தேவனுடைய செல்லக்குமாரன்

திருநிறை செல்வன்


இயேசு (எ) ஆட்டுக்குட்டியானவர்


என்கிற மணமகனுக்கும்


பூமியில் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்பட்ட


திருநிறை செல்வி


மணவாட்டி சபை


என்கிற மணமகளை

கர்த்தரால் கண்டறியப்பட்டு, த்திய ஆகாயத்தில் நடை பெறும் திருமணத்தில் தாங்கள் தங்கள் குடும்பமாய் வந்து கிறிஸ்துவின் சந்தோசதிற்குள் பிரவேசிக்கும் படி அன்புடன் அழைக்கிறேன்.


தங்கள் அன்புள்ள,

தேவனின் சார்பாக, தேவனின் எழுதுகோல்.

அவ்வண்ணமே விரும்பும்

மணவாளனுடைய தோழர்:
பழைய ஏற்ப்பட்டு பரிசுத்தவான்கள்.

மணவாட்டியின் தோழி:
புதிய ஏற்ப்பட்டு இரத்தசாட்சிகள்.

விருந்து : கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்தது . ஏசாயா 25:6

No comments:

Post a Comment