Friday, March 5, 2010

தவறான முடிவுகள்

இயேசுவுக்கே மகிமை

தவறான முடிவுகள்

1. எஸ்தர் 3:12 ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப் பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.

ஆம் ராஜாவாகிய அகாஸ்வேரு எல்லா யூதரையும் கொலை செய்யும்படி தன் மோதிரத்தினால் முத்திரையிட்டான். ஆனால் அவன் ஒன்றை யோசிக்க மறந்துவிட்டான். ஆம் அவன் தன் அன்பு மனைவி எஸ்தர் யார் என்பதை மறந்துவிட்டான்போலும், அவளும் ஒரு யூத ஸ்த்ரீ தானே எல்லா யூதரையும் கொலை செய்யும்படி தன் மோதிரத்தினால் முதிரையிட்டால் எஸ்தர் மட்டும் தப்புவது எப்படி? ஆம் அவன் ஒரு தவறான முடிவு எடுத்தான். ஆனால் புத்தியுள்ள எஸ்தர் தன்னையும் முழு யூத குலத்தையும் காப்பாற்றிகொண்டாள்.

2. 22. ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்;

23.
நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.

ஏரோது சிறு பெண்ணை பார்த்து ராஜ்யத்தில் பாதிதான் தருவேன் என வாக்குபன்ணினான். ஆனால் அவன் யோவான்ஸ்நானனுடைய தலையை கொடுக்க சம்மதித்தது ஏனோ ? ஆம் ஒரு மனிதனுடைய ஆத்துமா உலகத்தைகாட்டிலும் விலையேற பெற்றது என்றால் யோவான்ஸ்நானன் உலகத்தைகாட்டிலும் விலையேறபெற்றவன் தானே ? அப்படியானால் ராஜ்யத்தில் பாதிதான் தருவேன் என வாக்குபன்ணிவன் முழு உலகத்தை காட்டிலும் விலையேற பெற்றவனுடைய தலையை எப்படி கொடுக்கமுடியும்? ஆம் அவன் தவறான முடிவெடுத்து கொலை பாதகனாய் மாறினான்.

நாமுங்கூட முக்கியமான விஷயங்களில் முடிவு எடுக்கும்போது தேவ ஞானத்தோடு ஜாக்கிரதையாய் முடிவு எடுப்போம், தேவனாமத்தை மகிமைபடுத்துவோம்.

கிறிஸ்துவில்அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment