Thursday, March 18, 2010

எறும்பின் மகா ஞானம்

இயேசுவுக்கே மகிமை

எறும்பின் மகா ஞானம்

இந்த பூமியில் வாழ்ந்த அல்லது வாழுகின்ற மனிதர்களில் மிகப்பெரிய ஞானவான் யார் என்று கேட்டால் நாம் சற்றும் யோசனையின்றி பதில் சொல்வோம் அது சாலமோன் என்று. சாலமோனுக்கு அவ்வளவு பெரிய ஞானத்தை தேவன் கொடுத்திருந்தார். ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் மகா ஞானவான்கள் நான்குபேர் உண்டு, இவர்களைப்பற்றி அநேகருக்கு தெரிவதில்லை. அவர்களில் ஒன்று எறும்பு

நீதிமொழிகள் 30 அதிகாரம்

24. பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.

25.
அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,

இந்த எறும்பின் மகா ஞானம் என்னவென்று நம்மிடம் கேட்டால் அதற்கும் நாம் உடனடியாக பதில் சொல்வோம் அது எறும்பின் சேமிக்கும் பழக்கம் தான் என்றது.

நீதிமொழிகள் 6:6 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

7. அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,

8.
கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

அப்படி எறும்பின் சேமிக்கும் பழக்கத்தை வைத்து வேதாகமம் எறும்பு மகா ஞானமுள்ளது என்று சொல்லியிருந்தால், இன்று வருமான வரி கூட கட்டாமல் சுவிஸ் வங்கிகளிலும், பினாமி பெயர்களிலும் பல ஆயிரம் கோடிகளை சேமித்து வைத்துள்ளவர்களை என்னவென்று சொல்லுவது.

எறும்புக்கு ஒரு ஞானம் இருந்தது. அது காலத்தை அறிந்து கொள்ளுகிற ஒரு ஞானம். அதாவது கோடைகாலம் எது, மழைக்காலம் எது என்பதை அறிந்து கோடை காலத்தில் ஆகாரத்தை சேமித்து வைக்கும் பழக்கம்.

8. கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

ஆம் அதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஞானம் இருக்க வேண்டும். அது காலத்தை அறிந்து கொள்ளுகிற ஞானம். அதாவது பகற்காலம் எது இராக்காலம் எது என்று அறிந்துகொண்டு பகற்காலத்தில் நாம் ஆத்துமாக்களை சம்பாதிக்க வேண்டும். இதை இயேசு நன்கு அறிந்திருந்தார், ஆகவே தான் அவர் சொன்னார்

யோவான் 9:4 பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.

மேலும் வசனத்தை கேட்க கூடாத ஒரு பஞ்சம் வருகிறது. இன்று தொலைகாட்சி ஊழியம், இலக்கிய ஊழியம், வானொலி ஊழியம், ஈமெயில் ஊழியம் என்று வசனங்கள் தாராளமாய் நமக்கு கிடைக்கிறது. ஆகவே இன்று நாம் வனத்தை நம் இருதயத்தில் சேமித்து வைப்போம்.

ஆமோஸ் 8:11 இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

பக்தன் மோசே தனக்கு ஒரு ஞானத்தை தேவனிடம் கேட்டான். அது நாட்களை எண்ணும் ஒரு அறிவு, தன்னுடைய வாழ்நாளை எண்ணும் ஒரு அறிவு.

சங்கீதம் 90:12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

இன்று இந்த அறிவு இல்லாததால் அநேகர் தங்கள் வாழ்நாட்கள் இன்னும் பல வருடங்கள் இருக்குமென்று கருதி உலகத்தின் சுக போகங்களில் வாழ்ந்து, தேவனை மறந்து தங்கள் ஆத்துமாக்களை கறை படுத்தி வாழ்கின்றனர். அந்தோ பரிதாபம் திடீரென்று ஏற்படும் விபத்துக்கள், பூமியதிர்ச்சிகள், சுனாமிகள் அவர்களை வாரிக்கொண்டு போகும்போது நித்திய பரலோக ராஜ்யத்தை இழந்து, அக்கினி கடலாகிய நரகத்திற்குள் போய்விடுகிறார்கள்.

பகற்காலம் என்று சொல்லும்போது இன்றைய கிருபையின் காலத்தை குறிக்கும். இராக்காலம் என்று சொல்லும்போது அந்திக்கிறிஸ்துவின் நாட்களாகிய இருண்ட நாட்களை குறிக்கும். ஆகவே கிருபையின் நாட்களாகிய இந்த நாட்களில் அழிந்து போகிற ஆத்துமாக்களை தேவனின் களஞ்சியத்தில் சேர்க்க நம்மால் இயன்ற அளவு பாடுபடுவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக!

ஆகவே II தீமோத்தேயு 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

ஏசாயா 52:7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

லூக்கா 10:2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment