Friday, March 5, 2010

மரித்தோர் முதலாவது எழுந்திருப்பார்கள்

இயேசுவுக்கே மகிமை

மரித்தோர் முதலாவது எழுந்திருப்பார்கள்


I தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

வேதத்தில் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டில் மறைந்துள்ளது, அதுபோலவே பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டில் நிறைவேறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதுபோலவே புதிய ஏற்பாட்டில் சம்பவிக்க போகிற சில பெரிய நிகழ்ச்சிகள் பழைய ஏற்பாட்டில் சிறிய நிகழ்வுகளாக நடைபெற்றுள்ளது.உதாரணமாக இரண்டாம் வருகையிலே நாம் கண்ணிமை நேரத்தில் பறந்து இயேசுவோடு கூட சேர்ந்து கொள்வோம். இதை நாம் விசுவாசிக்கும்படி பழைய ஏற்ப்பாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் எலியா உயிரோடு கூட அக்னிரததில் பரலோகிற்கு எடுத்துகொள்ளபட்டது.

அதுபோலவே ஆண்டவர் இயேசுவின் இரகசிய வருகையிலே மரித்தோர் முதலாவது எழுந்திருப்பார்கள் பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள் மேல் எடுதுகொள்ளபடுவோம்.இதை நாம் விசுவாசிக்கும் படி பழைய ஏற்ப்பாட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதாவது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி புறப்படும்போது மரித்த யோசேப்பினுடைய எலும்புகள் முன்செல்ல (மரித்த யோசேப்பு முன்செல்ல) அதை பின்பற்றி உயிரோடிருந்த ஜனங்கள் கானானை எதிற்கொண்டு போனார்கள

யாத்திராகமம் 13:19 மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment