Wednesday, March 17, 2010

இயேசுவின் தூய அன்பு

இயேசுவுக்கே மகிமை

இயேசுவின் தூய அன்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய தாய் திருநாட்டை உலுக்கிய ஒரு சம்பவத்தை நாம் யாவரும் அறிந்ததே. ஆம் பிரம்மச்சாரியத்தை அநேகருக்கு கற்று கொடுத்த குருவே, தன்னை பாதுகாக்க முடியாமல் மாம்ச இச்சைக்கு அடிமையாகி தோற்று போனதை. அவரை அநேகருக்கு அறிமுக படுத்தியதில் ஒரு பிரபல மாத இதழுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஆனால் அவரை குறித்து தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான பொது அந்த மாத இதழ் சம்பந்தபட்டவரின் பெயருடன் அவருடைய லீலைகள் என்று செய்திபோட்டு அவரை கேவலப்படுதியதிலும் அந்த மாத இதழுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால் இப்படி குற்றம் சாட்டியவர்களுடைய அந்தரங்க வாழ்கையை அலசி பார்த்தால் அவர்களிலும் கூட தோற்றுபோனவர்களே அதிகம் பேர் இருப்பார்கள் . இங்கு நான் கூற வருவது தோற்று போன அல்லது அசுத்தமாய் வாழ்கிற ஒரு மனிதனுக்கே மற்றொரு மனிதன் செய்யும் தவறை ஏற்று கொள்ளவோ அல்லது மன்னிக்கவோ முடியவில்லை.

இதுபோலவே இயேசு வாழ்ந்த நாட்களிலும் ஒரு சம்பவம் நடந்தது. அங்கே இயேசுவின் அன்பு எவ்வளவு பெரியது எனபது வெளிப்பட்டது. இயேசு நூற்றுக்குநூறு பாவமில்லா பரிசுத்தர். ஆனால் அவர் பாவிகளை எவ்வாறு நேசித்தார், மன்னித்தார் என்பதை பார்க்கும் போது மனிதனுக்கும், ஆண்டவராகிய இயேசுவுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

யோவான் 8 அதிகாரம் (3-12)

3. அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:

4.
போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.

5.
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.

6.
அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.

7.
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,

8.
அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

9.
அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.

10.
இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

11.
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

12.
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

கிறிஸ்த்துவுக்குள் மிகவும் பிரியமான நண்பர்களே பார்த்தீர்களா? இயேசுவின் அன்பும், மன்னிக்கும் சுபாபமும் எவ்வளவு பெரியதென்று. ஆம் அவருடைய அன்பு குற்றமற்றது, மாசில்லாது, களங்கமற்றது, தூய்மையானது, பரிசுத்தமுள்ளது. ஆனால் அவர் ஒன்றை வற்ப்புறுதினார். அதாவது அவள் மீண்டும் பாவம் செய்வதை அவர் விரும்பவில்லை, ஆகவே நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். ஆம் இயேசு பாவிகளை நேசிக்கிறார், பாவாத்தையோ வெறுக்கிறார்.

மாற்கு 2:17 பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

அநேகர் தங்கள் கவர்ச்சிகரமான பேச்சாற்றலால் தங்களை தாங்களே கடவுளாக்கிகொண்டு ஜெயித்தவர்களை போலாக்கிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் அந்தரங்க வாழ்க்கையோ தோற்றுபோய் சாக்கடையை போல காணப்படுகிறது. தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே என்ற பழமொழியைப் போல தோற்றுப் போன தலைவனை பின்பற்றுகிற தொண்டர்களும் பரிசுத்தமாகவோ அல்லது ஜெயம் பெற்றவர்களாகவோ வாழ முடியாது என்பது யதார்த்தமான சத்தியம். அநேக சினிமா நடிகர்கள் அநேகரை சிரிக்க வைக்கிறார்கள், அநேக வாலிபர்களின் வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவராக்குகிறார்கள். அநேகரை சிரிக்க வைத்த அவர்களோ இரவுவேளைகளில் சமாதானமில்லாமல் தடுமாறுகிறார்கள். குடித்து வெறித்து தங்கள் கவலைகளை மறக்க முற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களால் முடிவதில்லை. காரணம் நாம் தேடும் நிம்மதியை இயேசு ஒருவரே தர முடியும். ஏன் ஒரு மனிதனுக்கு சமாதானக்குறைவு வருகிறது? பரிசுத்த வேதம் கூறுகிறது ஏசாயா 48:22 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று.

நண்பர்களே நமக்கு சமாதானம் வேண்டுமா? இயேசுவை பின்பற்றுவோம் பிலிப்பியர் 4:7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

ஆகவே நாம் ஜெயம் பெற்றவர்களாய் வாழவும், பரிசுத்தமாய் வாழவும் இயேசுவை சார்ந்து கொள்வோம். அவருடைய கிருபை ஒன்றே போதுமானது.

ஆண்டவராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்த போது சவால் விட்டுக் கேட்டார் யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?

மத்தேயு 27:19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.

மத்தேயு 27:24 கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

ஆம் இயேசு நீதிமானென்று அநேகர் அவரைக்குறித்து சாட்சி கொடுத்தனர்.

வாழ்க்கையில் தோற்றுப்போன மனித கடவுள்களையும், சினிமா நடிகர்களையும் பின்பற்றுவதற்கு இன்று முற்றுப்புள்ளி வைப்போம். அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தமாய் வாழ்ந்தவரும், கல்வாரி சிலுவையில் வெற்றி சிறந்தவருமான யூத இராஜ சிங்கம் இயேசு தாமே நமக்கும் வெற்றி தருவாராக! அவரை நாம் பின்பற்றுவோம், அவரே நம்முடைய மாதிரி.

Iகொரிந்தியர்15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

II கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

நண்பர்களே நாமுங்கூட இன்னும் பாவத்தில் முற்றிலும் விடுதலைபெறாமல் தடுமாறிக்கொண்டிருந்தால் ஆண்டவர் இயேசுவிடம் செல்வோம், அவர் நம்மை மன்னித்து இந்த பூமியில் பரிசுத்தமாய் வாழ ஒருவாய்ப்பை நமக்கு தருவார்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment