இயேசுவுக்கே மகிமை
நமக்கொருவர் தேவை
சங்கீதம் 40:2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
சதுப்பு நிலக் காடுகளின் போகும்போது மிகுந்த கவனத்துடன் நாம் நடந்து செல்லவேண்டும். நமக்கு சாதாரண மணல் தரை போன்று தெரியும், ஆனால் சகதிகள் நிறைந்த பகுதிகள் ஏராளமுண்டு. திடீரென்று ஒருவர் தவறி அந்த புதை மண்ணில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அதிலிருந்து வெளியே வருவது கூடாத காரியம். அவர்களை காப்பாற்ற நிச்சயமாக மற்றொருவருடைய உதவி தேவை.
அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயன்றால் இன்னும் அந்த சகதியில் அமிழ்ந்து கொண்டு போவார்களே தவிர அவர்கள் அதை விட்டு வெளியே வருவது கூடாத காரியம். அதாவது அவன் தன்னுடைய வலது காலில் அதிக பலத்தை செலுத்தி தனது இடது காலை வெளியே எடுக்க நினைப்பான். ஆனால் அவனுடைய வலது கால் அந்த புதை மணலில் அதிக ஆழத்தில் புதைந்து விடும். இப்போது அவன் தன்னுடைய இடது காலில் அதிக பலத்தை செலுத்தி தனது வலது காலை வெளியே எடுக்க நினைப்பான, ஆனால் அவனுடைய இடது கால் அந்த புதை மணலில் அதிக ஆழத்தில் புதைந்து விடும். இப்படி அவன் தன் சொந்த முயற்சியில் போராடினால் சில நிமிடங்களில் அவனுடைய சரீரம் முழுவதும் அந்த சகதியில் அல்லது புதை மணலில் அமிழ்ந்து விடும். இந்த சூழ்நிலையில் அவன் உயிர் பிழைக்க ஒரே ஒரு வளி அவனை, அந்த சகதிக்கு வெளியில் உள்ள ஒருவர் காப்பாற்ற முன்வர வேண்டும்.
அதுபோலவே பாவத்தில் அடிமைப் பட்ட ஒருவன் தன் சொந்த முயற்சியில், அந்த பாவத்திலிருந்து விடு பட முயற்சித்தால், அவன் மீண்டும் அந்த பாவத்தில் அமிழ்ந்து அழிந்து போவானே ஒழிய அவன் அதிலிருந்து விடுபட வாய்ப்பில்லை. ஆகவே பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்க பாவமில்லா ஒரு பரிசுத்தர் நமக்குத் தேவை. அவர் தான் நமது அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
ஒருமுறை பேதுரு அவரோடு கூட கடலில் நடந்த போது, திடீரென அவன் பார்வை இயேசுவை விட்டு திரும்பி ஆழ்கடலின் பக்கம் போனபோது, இமைப்பொழுதில் கடலில் மூழ்க ஆரம்பித்தான். மனதுருகமுள்ளவர் இயேசு கைவிடுவாரோ? ஆண்டவரே என்னை ரட்சியும் என்று அவன் அவருடைய மனதுருக்கமுள்ள முகத்தை நோக்கிப் பார்த்த போது உடனடியாக அவனுடைய கரத்தை பிடித்து அவனை தூக்கி எடுத்தார்.
மத்தேயு 14:30 காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
ஏசாயா 1:18 உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
jesus is not god. i need allah . i need only one god. there is no god but allah. Say, "He is Allah , [who is] One,Allah , the Eternal Refuge.He neither begets nor is born,Nor is there to Him any equivalent."
ReplyDelete