Friday, March 5, 2010

பாவத்தின் ஓர வஞ்சனை - பாகம் II

இயேசுவுக்கே மகிமை

பாவத்தின் ஓர வஞ்சனை - பாகம் II

விட்டில் பூச்சியானது விளக்கு வெளிச்சத்தை பார்த்தவுடன் பேரானந்தம் அடைந்து அதை சுற்றி சுற்றி வருகிறது. திடீரென அந்த விளக்கினுடைய தீ ஜுவாலையில் தவறி விழுகிறது. அந்தோ பரிதாபம் தன்னை பேரானந்தம் அடைய வைத்த விளக்கே அதினுடைய உயிரை வாங்கிவிட்டது.

எறும்பானது தேனை பார்த்தவுடன் உற்சாகமடைகிறது, வயிறு புடைக்க குடிக்கிறது. அளவுக்கு அதிகமாய் குடித்ததன் காரணமாக மேலே வர தன் முளுபலத்தோடே முன்னங்காலை ஊன்றி பின்னங்காலை மேலே தூக்கும் போது முன்னங்கால் தேனிற்குள் புதைந்து விடுகிறது. அந்தோ பரிதாபம் இன்பம் தந்த தேனே அதன் உயிரை பறித்து விட்டது.

மீனானது துடிக்கும் புழுவை பார்த்தவுடன், அதனுள் மறைத்து வைக்கப்பட்டுள்ள தூண்டிலை பார்க்காது ஆசை, ஆசையாய் புழுவை விழுங்குகிறது. அந்தோ எதிரியின் தூண்டிலில் மாட்டி உயிரை இழந்து விடுகிறது.

குருவியானது வேடனுடைய கண்ணியை அறியாது, தானியத்தை பார்த்தவுடன் அதை சாப்பிட அமருகிறது. அந்தோ வேடனுடைய கண்ணியில் மாட்டி தன் உயிரை இழந்து விடுகிறது.

ஆம் இரத்த வருணமாய் இருக்கும் மது பானங்களும், பீடி, சிகரெட்டுகளும் மற்றும் மாயையான சினிமாக்களும் சில மணிநேரங்கள் சிற்றின்பம் தந்தாலும், அவைகள் எதிரியாகிய பிசாசு நமக்கு விரிக்கும் வலைகளே. ஜாக்கிரதையாய் இருப்போம், பேரின்ப நாதராம் இயேசுவை நமக்கு சொந்தமாக்கி கொள்வோம். நித்தியபேரின்ப பரலோகத்தை சுதந்தரமாக்குவோம்.



II பேதுரு 2:13 இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;


கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment