Friday, March 5, 2010

முட்களின் நடுவே லீலிபுஷ்பம்

இயேசுவுக்கே மகிமை

முட்களின் நடுவே லீலிபுஷ்பம்

உன்னதப்பாட்டு 2:2 முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.

ஒரு லீலி புஷ்பமானது முட்களால் சூழப்பட்டு அதின் நடுவில் இருக்கும்போது அதுவே அந்த புஷ்பத்துக்கு மிகுந்த பாதுகாப்பு. காரணம் அது முட்களால் சூழப்பட்டு இருப்பதால் எதிரி அதை எளிதில் பறித்து விட முடியாது. ஆனால் காற்று பலமாக வீசும்போது அந்த லீலி புஷ்பமானது அசையும் அப்போது முட்கள் அதை குத்துகிறது, இதனால் அதற்கு மிகுந்த வலி உண்டாகிறது. ஆனாலும் அதன் இதழ்களில் முட்கள் குத்தும் போது அதிலிருந்து வெளிவரும் திரவத்தினால் மிகுந்த வாசனை வீச ஆரம்பிகிறது. இப்போதுதான் அந்த லீலி புஷ்பமானது உண்டாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுகிறது.

அதுபோல நாமும் கூட முட்கள் போன்ற பாடுகளின் மத்தியில் இருந்தால், ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நாம் மிகவும் சரியான அல்லது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோமென்று. ஆண்டவர் இயேசுவும் கூட தன்னை குத்தினவர்களையும் கூட 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்று சொல்லி மன்னித்தன் மூலம் தன்னிலுள்ள வாசனையை வெளிப்படுத்தினார். ஆம் இன்றளவும் அவருடைய வாசனை உலகம் முழுவதும் வீசிகொண்டேயிருக்கிறது.

கொரிந்தியர் 2:15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

கிறிஸ்துவில்அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment