இயேசுவுக்கே மகிமை
பழைய பாத்திரம்
மத்தேயு 9:17 புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்து வைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
ஆம் அதுபோலவே ஆண்டவரும் பழைய பாத்திரமாகிய மனம் திருந்தாதவர்கள் மேல் புதிய ஆசீர்வாதத்தை ஊற்றுவதில்லை. காரணம் புதிய ஆசீர்வாதம் அவனுடைய வாழ்கையை மேலும் கெடுத்துவிடும். உதாரணமாக ஒரு மனுஷனுடைய மாத வருமானம் 5000 ரூபாய் என்று வைத்து கொள்வோம். இந்த மனுஷன் இந்த 5000 ரூபாய் வருமானத்திலேயே தினமும் 200 ரூபாய்க்கு மேல் குடித்து வெறித்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது தேவன் இவனை ஆசீர்வதித்து இவனுடைய மாத வருமானத்தை 15000 ஆம் ரூபாயாய் உயர்திக்கொடுப்பாரானால் இவன் தினமும் 500 ரூபாய்க்கு மேல் குடிப்பான். இப்போது இவனுடைய முந்தின வாழ்கையை விட பிந்தின வாழ்க்கை சீர்கெட்டு போய்விடும், அவனுடைய வாழ்க்கையிலே பீறல் அதிகமாகிவிடும்.
ஆம் பிரியமானவர்களே நாமும் நம்முடைய வாழ்கையை சீர்தூக்கி பார்ப்போம் புதிய ஆசீர்வாதத்தை தேவன் நம்மேல் ஊற்றும்படி நாம் புதிய பாத்திரமாய் மாறுவோம்
கிறிஸ்துவில்அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment