Friday, March 5, 2010

பாவத்தின் ஓர வஞ்சனை - பாகம் I

இயேசுவுக்கே மகிமை

பாவத்தின் ஓர வஞ்சனை - பாகம் I

ஒரு எஜமானுடைய வீட்டில் நாய் குட்டி ஓன்று வாழ்ந்து வந்தது. சில வருடங்கள் சென்ற போதுஅதற்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது, அதாவது எஜமானுடைய வீட்டை விட்டு வெளியேறி சுதந்தரமாய் வாழவேண்டுமென்று. அதுபோலவே ஒரு நாள் சமயம் வாய்த்தபோது, எஜமானுடைய வீட்டை விட்டுவெளியேறியது. அங்குமிங்கும் அலைந்து திருந்து குப்பை தொட்டிகளில் கிடைத்ததை சாப்பிட்டது. இப்படி அது ஒரு நாள் தெருவில் அலைந்து திரிந்த போது ஒரு காய்ந்து போன எலும்பு துண்டு ஒன்று அகப்பட்டது,அது ஆர்வத்துடன் கடிக்க ஆரம்பித்தது, அது கடிக்க, கடிக்க ஒருவித சுவை ஒரு வித இன்பம் அதிலிருந்து வந்தது. நாய் குட்டிக்கு தாங்க முடியாத சந்தோசம். எனவே அது இன்னமும் இன்னமும் அதை ஆர்வத்தோடு கடித்தது. நேரம் ஆக ஆக நாய்குட்டிக்கு சோர்வு ஆரம்பித்து, இன்னும் நேரம் ஆனது, நாய் குட்டி தள்ளாட ஆரம்பித்து.ஆனாலும் அது எலும்பை கடிப்பதை விட அதற்கு மனமில்லை. இன்னும் கொஞ்சம் நேரமானது அந்த நாய் அப்படியே விழுந்து மரித்து போனது. ஆம் நண்பர்களே நடந்தது என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? அந்த உலர்ந்து போன எலும்பில் சுவை வருவதிற்கு அதில் ஒன்றுமில்லை. ஆனாலும் அது அந்த எலும்பை கடிக்க கடிக்க அந்த காய்த்துபோன எலும்பின் கூரிய நுனிப்பகுதிகள் அதின் நாக்கை கிழிக்க அந்த நாக்கிலிருந்து வந்த ரத்தத்தின் சுவை தான் அது. நேரம் ஆக ஆக அது தன் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக தன் முழு ரத்ததையும் இழந்து போனது. மரணம் அதைஆட்கொண்டது.

அதுபோல தான் மனிதர்களும் சாராயம், அபின், கஞ்சா மற்றும் சிகரெட் போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும்போது, அது கொஞ்ச நேரம் இன்பத்தை கொடுத்தாலும் கொஞ்சம், கொஞ்சமாய் அவர்களுடைய உயிரை குடித்துகொண்டிருக்கிறது.

ஆம் பாவம் வஞ்சனை உள்ளது , அது கொடியது.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment