Friday, March 19, 2010

கர்த்தரின் ஆசீர்வாதம்

இயேசுவுக்கே மகிமை

கர்த்தரின் ஆசீர்வாதம்

நீதிமொழிகள் 10:22 கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

மேற்கண்ட வசனத்தின் படி பார்த்தால் இந்த உலகத்தில் பல ஆசீர்வாதங்கள் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதாவது பெற்றோர்களின் மூலம் பிள்ளைகளுக்கு வரும் ஆசீவாதங்கள், முற்பிதாக்கள் மூலம் வரும் ஆசீர்வாதங்கள், படித்ததினால் கிடைத்த ஞானத்தினால் சம்பாதிக்கும் ஆசீவாதங்கள் மற்றும் பிசாசினால் கிடைக்கும் ஆசீவாதங்கள் என்று பல உள்ளன.

இதில் பெற்றோர்கள் நியாயமாய் சம்பாதித்த ஆசீர்வாதங்கள் பிள்ளைகளுக்கு நன்மை பயக்கும். ஆனால் சிலர் விதவைகள் மற்றும் திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அநியாயமாய் அடியாட்கள் மூலம் மிரட்டி சம்பாதித்து தங்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்திற்கு பதில் சாபத்தை சேர்த்து வைக்கிறார்கள். தகப்பன் செய்கிற அக்கிரமத்தை பிள்ளைகளிடம் மூன்றாம், நான்காம் தலைமுறை முறை மட்டும் நியாயம் விசாரிக்கிற கர்த்தர், அவர்கள் செய்த தப்பிதங்களை அவர்கள் உணர்ந்து தேவனிடம் மன்னிப்பு கேட்காமல் போகும்போது, மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறைகளில் அது சாபமாய் மாறி அவர்கள் சம்பாதித்து வைத்தவைகள் மருத்துவமனைகளுக்கும், காவல் நிலையங்களுக்கும் போகத்தக்கதாய் பாரம்பரிய வியாதிகள் மற்றும் குடும்பத்தில் சமாதானக்குறைவுகள் ஏற்ப்படுகின்றன.

யாக்கோபை பாருங்கள் தன் அண்ணனை ஏமாற்றி சேஷ்ட புத்திர பாகத்தை எடுத்துக்கொண்டான். மேலும் அவனுடைய தாய், அவன் அவனுடைய தகப்பனை ஏமாற்றி ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படி தவறான யோசனை கூறினாள். இதினிமித்தம் அவன் உயிருக்கு பயந்து தலை மறைவாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டது.

ஒரு நாள் அவனுக்கு புரிந்தது, கர்த்தருடைய ஆசீர்வாதம் தான் ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டாரென்று. ஆகவே தேவ சமுகத்தில் ஒருநாள் இரவு முழுவதும் பிந்தி தனித்திருந்தான். தேவன் அவனை ஆசீர்வதித்தார், அதனால் ஏமாற்றும் எத்தனாயிருந்த அவன் இஸ்ரேல் என்று மாறினான். பாருங்கள் இன்று அவனுடைய பெயரால் இஸ்ரேல் என்று ஒரு நாடே இருக்கிறது. மாத்திரமல்ல அவனுடைய சந்ததியில் வந்தவர்கள்தான் பிரபல விஞ்ஞானிகளான மைக்கேல் பாரடே, கலிலியோ, ஐசக் நியூட்டன், ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் போன்றவர்கள்.

பிசாசும் ஒரு மனிதனை ஆசீர்வதிக்க முடியும். ஒருவேளை நீங்கள் பிசாசு ஒரு மனிதனை ஆசீர்வதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பலாம்.

லூக்கா 4:7 நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.

அவனை ஆராதித்தால் அவன் ஆசீர்வதிப்பான், ஆனால் அதோடு கூட வேதனையையும் கூட தருவான். ஏனென்றால் அவன் பொறாமை பிடித்தவன்.

உதாரணமாக அவன் ஒரு ஏர் கண்டிஷனை தருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அனால் அதை அனுபவிக்க விடமாட்டான். அந்த ஏர் கண்டிஷன் ரூமில் சிலமணி நேரம் ஓய்வு எடுத்தால் உடனடியாக ஜலதோஷம் வந்துவிட வைப்பன். நல்லதொரு சொகுசு காரைத் தருவான், குடும்பமாய், சந்தோஷமாய் போகும்போது விபத்து நேரிட வைப்பன்.

பிசாசு எப்படி ஆசீர்வதிப்பானென்று கேட்கிறீர்களா? அவன் லஞ்சம் வாங்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கித் தருவான். மேலும் குதிரை பந்தயங்கள், கார் பந்தயங்கள், லாட்டரி போற்றவைகள் மூலம் கோடிகோடியாய் தருவான். ஆனால் ஆண்டவர் ஒருபோதும் சில நாட்களில் பல ஆயிரம் கோடிகளை தரமாட்டார். அவர் படிப்படியாய் ஆசீர்வதிப்பார். அது நிலையான, சமாதானமுள்ள ஆசீர்வாதங்களாயிருக்கும்.

ஆதியாகமம் 26:13 அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

II சாமுவேல் 5:10 தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.

தேவனுடைய ஆசீர்வாதத்தின் படிகள்,

  1. இரண்டு மடங்கு

யோபு 42:10. யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

  1. ஐந்துமடங்கு

ஆதியாகமம் 43:34 அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.

3. பத்துமடங்கு

20. ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.

4. நூறுமடங்கு

ஆதியாகமம் 26:12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

5. ஆயிரமடங்கு

உபாகமம் 1:11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.

6. கோடாகோடி

ஆதியாகமம் 24:60 ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

7. இடங்கொள்ளாமற்போகுமட்டும்

மல்கியா 3:10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

யோசேப்பு தன் தம்பியாகிய பென்யமீனுக்கு கொடுத்ததுதான் ஐந்துமடங்கு ஆசீர்வாதம். நாமும் இயேசுவை நம்முடைய மூத்த சகோதரனாக ஏற்றுகொள்ளும் போது ஐந்துமடங்கு ஆசீர்வாதத்தையும், மணவாட்டியாகிய ரெபெக்காளுக்கு கொடுக்கப்பட்ட கோடாகோடி ஆசீர்வாதத்தை, நாம் மணவாட்டி சபையாய் மாறும்போதும், நமது தசமபாகத்தை சரியாய் தேவனுடைய சபைக்கு கொடுக்கும்போது இடம் கொள்ளாமற்போகுமட்டும் தேவன் நமக்கு கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக என்ற தேவன் தசம பாகத்தில் மட்டும் தன்னை சோதித்து அல்லது பரீட்சித்து பார்க்கும்படி அனுமதி நமக்கு தந்திருக்கிறார்.

மல்கியா 3:10 அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

நாம் ஒரு உறவினருடைய வீட்டுக்கு போகும்போது வெறும் கையோடு போவதில்லை. ஆம் நாம் நம்முடைய ஆண்டவரை பாடி ஆராதனை செய்யும் போது, அவர் நம்மை சந்திக்கும்படி நம்மை எதிகொண்டு வருவார். அப்பொழுது அவர் வெறும் கையோடு வருவதில்லை. சங்கீதம் 21 : 3. உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.

நீதிமொழிகள் 28:20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment