இயேசுவுக்கே மகிமை
பாம்பு மண்ணை தின்னுமோ ?
ஆதியாகமம் 3:14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
பாம்பு மண்ணை தின்னுமோ ?
எனக்கு தெரிந்தவரையில் பாம்பு மண்ணை சாப்பிடுவதாக தெரியவில்லை. மேலும் இதைப் பற்றி தெரிந்துகொள்ள கூகிள் இணையதளத்தின் உதவியை நாடினேன், அதிலும் பாம்பு மண்ணை சாப்பிடுவதற்கான ஆதாரத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியானால் வேதம் பொய் சொல்லுமோ? வானமும் பூமியும் ஒளிந்து போனாலும் வேதத்திலுள்ள ஒரு எழுத்தாகிலும் அதின் உறுப்பாகிலும் அவமாய் போவதில்லை என்றல்லவா ஆண்டவர் இயேசு சொன்னார்.
மேற்கண்ட பாம்பு சாப்பிடும் மண்ணை கண்டுபிடிக்க பரிசுத்த வேதாகமத்தின் உதவியை நாடினேன் ஆம் கீழ்க்கண்ட வேத வசனங்களின் ஆதாரத்துடன் ஒருசில உண்மையை கண்டேன்.
ஆதியாகமம் 3:19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.
சங்கீதம் 103:14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை
I கொரிந்தியர் 15:48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
மேற்கண்ட வசனங்களை ஆதாரமாக கொண்டு பார்க்கும்போது அந்த சர்ப்பம் சாப்பிடும் மண் மண்ணான மனிதன் தானோ ? என்று நினைக்க தோன்றுகிறது.
மனிதன் பாவம் செய்தபோது சாபதிற்குள்ளானான். அப்படி பாவத்திலும் சபத்திலும் வாழும் மனிதனை சர்ப்பமாகிய சாத்தான் இன்றும் தின்றுகொண்டுதான் இருக்கிறான். ஆம் சாபத்தில் வாழும் அநேகருடைய உடல் உறுப்புக்களை கிருமிகள் போன்ற உருவத்தில் சாப்பிடுகிறான்.கேன்சர் எய்ட்ஸ் போன்ற நோய்கிருமிகளாக, வைரஸ் கிருமிகளாக மண்ணான மனுசனை சாப்பிடுகிறான்.
பிரியமானவர்களே இதற்கு தப்பும்படி நாம் பாவத்தையும், சாபத்தையும் விட்டு மனம் திரும்பி தேவன் தங்கும் தேவாலயமாய் மாறுவோம். நமக்குள்ளே தேவன் வாசம் பண்ணுவார். தேவன் நக்குள்ளே வரும்போது நமக்கு ஜீவன் உண்டாயிருக்கும்படியும், அது பரிபூரனப்படும்படியாகவும் வருவார். ஆனால் பிசாசு ஒரு மனிதனுக்குள் வரும்போது அவனை கொல்லவும், அளிக்க்கவுமே வருகிறான்.
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment