Saturday, May 29, 2010

இன்று ஒரு கேள்வி – 7

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 7


இன்றைய நவீன காலத்தில் கால்சென்றர் போன்ற புதிய தொழில்களால், இரவு(முழு இரவு) நேர பணி பல தொழில் நகரங்களில் வேகமாக பரவி, நடந்து வருகிறது. இப்படி தொடர்ந்து இரவு நேர பணிகளால் மனிதனின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மேலும் பாவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வேதாகமம் நாம் உழைத்து, பணி செய்ய நமக்கு எந்த வேளை சிறந்தது என்று நியமித்துள்ளது. உங்கள் கருத்துக்களை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம். மருத்துவர்கள் இருந்தால் இதினிமித்தம் மனிதனுக்கு வரும் தீமைகளை மருத்துவ ரீதியாக எழுதி அனுப்பலாம்.


1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 28.05.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

15.05.2010 அன்றைய இன்று ஒரு கேள்வி 6” க்கான சரியான விடைகள்.



தாவீது கோலியாத்தை கொன்று, வெற்றியோடு திரும்புகையில் பெண்கள் நடனமாடி; சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை, முறையாக பாடினர். இப்படி பாடியதால் சவுல், தாவீதின் மேல் பொறாமைகொண்டான். இது சவுலுடைய ராஜ்யபார வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. அந்த பெண்கள் பாடியது தவறா? இல்லை சவுல் புரிந்து கொண்டது தவறா?


வேதவசனத்தின் படி ஒரு மனிதன் தேவனுடைய துணையோடு கூட ஒரே நேரத்தில் ஆயிரம்பேரை(சத்துருவை) துரத்தலாம்.

யோசுவா 23:10 உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

ஆனால் இருவர் ஒருமனமாய் ஜெபித்தால்(யுத்தம்பன்னினால்) இது பத்து மடங்கு அதிகமாய் இருக்கும்.

ஒருவன் – 1000

இருவர் – 1000 X 10 = 10000

உபாகமம் 32:30 அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

அந்த பெண்கள் இந்த வேத வசனத்தின் படி சவுல் தனியாக கொன்றது ஆயிரம், தாவீதோடு சேர்ந்து கொன்றது பதினாயிரம் என்ற அர்த்தத்தில் பாடியிருக்கலாம். ஆகவே அந்த பெண்கள் பாடியதில் தவறில்லை. சவுல் புரிந்து கொண்டதே தவறு.

தேவனுடைய துணையோடு ஒருவன் ஆயிரம் பிசாசுகளையும், இருவர் பதினாயிரம் பிசாசுகளையும் துரத்த முடியுமானால், இதியாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராயிருந்தாலும் சுமார் ஐந்து கோடி மக்களாகிலும் இருப்பார்கள் என்று கருதுகிறேன். ஐந்து கோடி தேவ ஜனமும் ஒருமனப்பட்டு, தேவனும் இணைந்தால் இந்தியாவிலுள்ள அசுத்த ஆவிகளை, பிசாசின் வல்லமைகளை, மூட பழக்கவழக்கங்களை எழிதில் ஜெயித்துவிடலாம்.

படிப்பறிவுள்ள இந்தியாவில் மழை பெய்யாவிட்டால் தவளைக்கு திருமணம், கழுதைக்கு திருமணம், வேப்பமரத்திற்கு திருமணம். இப்போதே இந்தியாவின் மூடப்பழக்கவழக்கங்கள் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். இது மக்களின் அறியாமையா? இல்லை சத்துரு அவர்கள் கண்களை மறைத்து வைத்துள்ளானா?

ஆனால் இவைகளை எதிர்த்து சத்துருவுக்கு எதிராய் ஜெபத்தில் போராடவேண்டிய கிறிஸ்தவர்களாகிய நாமோ நீ R . C, நான் C. S. I, அவன் லுத்தரன் , மற்றொருவன் பெந்தெகொஸ்தே என்று பிரிவினைக்குள் மூழ்கிபோயுள்ளது. நமது தலைமுறையிலாகிலும் இந்த சாபக்கேடு மாறுமா? வாலிப நண்பர்களே. நண்பர்களே உங்களுக்கு அறைகூவல் விடுத்து அழைக்கிறேன் சபை பாகுபாடை மறந்து ஓரணியில் திரள. ஒரு மனமாய் இருந்து தேவ ராஜ்யத்தை கட்டுவோம். இந்தியாவின் மூடபழக்கவழக்கங்களை வேரறுப்போம்.

நமக்கு தலை கிறிஸ்த்து, நாம் ஒவ்வொருவரும் அவர் சரீரத்தின் உறுப்புகள். ஆகவே சபை பாகுபாடு நமக்கு தேவையில்லை.


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment