Saturday, May 29, 2010

இன்று ஒரு கேள்வி – 8

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 8


தேவன் மன்னிக்க முடியாத இரண்டு பாவங்கள் எவைகள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பாலாம்.

1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 04.06.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

22.05.2010 அன்றைய ன்று ஒரு கேள்வி 7” க்கான சரியான விடைகள்.


இன்றைய நவீன காலத்தில் கால்சென்றர் போன்ற புதிய தொழில்களால், இரவு(முழு இரவு) நேர பணி பல தொழில் நகரங்களில் வேகமாக பரவி, நடந்து வருகிறது. இப்படி தொடர்ந்து இரவு நேர பணிகளால் மனிதனின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மேலும் பாவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வேதாகமம் நாம் உழைத்து, பணி செய்ய நமக்கு எந்த வேளை சிறந்தது என்று நியமித்துள்ளது. உங்கள் கருத்துக்களை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.


சங்கீதம்104 : 22. சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.

சங்கீதம்104 : 23. அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்.

மேற்கண்ட வசனத்தின்படி மனிதன் தான் உழைத்து பணிசெய்ய வேதாகமம் கூறும் சிறந்த வேளை காலையிலிருந்து சாயங்காலம் வரையே. ஆகவே தொடர்ந்து இரவு நேர பணி செய்யும் தேவ பிள்ளைகள், என் நாமத்தினாலே எதை கேட்டாலும் தருவேன் என்று வாக்களித்த தேவனிடம், பகல் பொழுதில் நல்ல ஒரு வேலையை கேட்டுப்பெற்றுக்கொள்வோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக!

யோவான் 14:14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

பிதாவின் சித்தம்

இயேசுவுக்கே மகிமை

பிதாவின் சித்தம்

எபிரெயர்10:7 அப்பொழுது நான்(இயேசு): தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் முழுவதுமாக தன்னை பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவர் சித்தம் ஒன்றையே செய்ய மிக ஜாக்கிரதையாய் இருந்தார். சுமார் மூன்றரை ஆண்டுகள் பிதாவின் சித்தப்படியே ஜனங்களுக்கு சுவிஷேசத்தை அறிவித்தார். இந்த பூமியில் பிதா தன் மூலம் செய்ய நினைத்த எல்லாவற்றையும் நிறைவேற்றி முடித்தபின்பு தான் இயேசு மேற்கண்ட வசனத்தில் சொன்னபடி புஸ்தகத்தில் என்னை குறித்து எழுதியிருக்கிறபடி உம் சித்தம் செய்ய வருகிறேன் என்றார்.

பொதுவாக நாம் சில காரியங்களுக்காக போராடுவோம், கடைசியில் அது கிடைக்காமல் போகும்போது தேவ சித்தப்படியே ஆகக்கடவது என்போம். ஆனால் இயேசு அப்படியல்ல முன்பதாகவே பிதாவின் சித்தம் என்ன என்பதை அறிந்திருந்தார். அவர் படவேண்டிய பாடுகள் எவ்வளவு என்பதை அறிந்திருந்தார்.

ஜனங்களின் பாவம் தன் மேல் சுமத்தப்படும்போது பிதாவாகிய தேவன் தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்வார் என்பதை அவர் அறிந்திருந்தார். பிதாவாகிய தேவன் தன்னுடைய முகத்தை மறைக்கும்போது அதை தன்னால் தாங்க முடியாது என்பதை அவர் அறிவார். ஆகவே தான் இயேசு பிதாவை நோக்கி சொன்னார்,

லூக்கா 22:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

இயேசு: புஸ்த்தக சுருளில் என்னை குறித்து எழுதியிருக்கிறது, பிதாவே உம் சித்தம் செய்ய வருகிறேன் என்றார். இயேசுவை குறித்த பிதாவின் சித்தம் என்ன?

ஏசாயா53:10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

பிதாவாகிய தேவன், தன்னுடைய ஏக சுதனும், நேச குமாரனுமாகிய இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக, அதாவது முந்தின ஆதாமாகிய ஒரே மனிதனாலே, எல்லா மனிதர்களையும் பாவம் ஆண்டுகொண்டது போல, பிந்தின ஆதாமாகிய இயேசு கிறிஸ்த்து என்னும் ஒருவராலே முழு உலகத்திற்கும் இரட்சிப்பு உண்டாகும்படி, அவரை நொறுக்க சித்தமாகி, தேவன் அவரை பாடுகளுக்கு உட்படுத்தினார்.

எபிரெயர் 2:10 ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபவத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.

யோபுவும் தன்னுடைய வாழ்க்கையை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்து வந்தபோது, இதே நொறுக்குதல் அவருடைய வாழ்க்கையிலும் வந்தது.

யோபு 16:14 நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாயந்தார்.

ஒரு நாள் இயேசு, பல மைல் தூரம் நடந்து ஊழியம்செய்ததினிமித்தம் களைப்படைந்தவராய் ஒரு கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்போது சமாரியா ஸ்திரீக்கு நற்செய்தி அறிவித்து அவளை இரட்சிப்புக்குள் நடத்தினார். அந்தவேளையில் சீசர்கள் போஜன பதார்த்தங்களை வாங்கும்படி வெளியே போயிருந்தனர். திரும்பி வந்த சீசர்களிடம் இயேசு சொன்னார் பிதாவின் சித்தத்தை செய்வதே என் போஜனமாய் இருக்கிறது என்றார்.

யோவான் 4:34. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

ஆம் இயேசு பிதாவின் சித்தத்தை செய்வதை தன் போஜனமாய் கருதினார். ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டுமானால் அவன் குழந்தையாய் பிறந்ததிலிருந்து தன் போஜனத்தை புசித்தாக வேண்டும். குழந்தை பிறந்த சில நிமிடங்களிலிருந்து தாய் பால் குடிக்க ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து அந்த குழந்தை மரிக்கும் நாள் வரை அது உயிர்வாழ வேண்டுமானால் ஆகாரம் புசித்தாக வேண்டும். ஒரு வேளை அந்த மனிதன் ஆகாரம் புசிக்க முடியாமல் மரணவேளையில் ஹோமா நிலையில் இருந்தாலும், அந்த மனிதன் மரிக்கும் வரையிலும் குளுக்கோஸாக அவனுடைய உடலினுள் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

ஆம் ஒரு மனிதன் ஆவிக்குரிய பிரகாரமாக தன் பாவங்கள் இயேசுவின் ரத்தத்தினால் கழுவப்பட்டு மறுபடியும் பிறந்ததிலிருந்து அவன் தேவ சித்தம் செய்தாக வேண்டும். ஒரு வேளை மரண வேளையாய் இருந்தாலும் தேவ சித்தம் மாத்திரமே செய்யப்படவேண்டும். ஒருவேளை நாம் கேட்கலாம் மரண வேளையில் எப்படி தேவ சித்தம் செய்ய முடியும்? என்று. இயேசு சிலுவையில் மரிக்கும் சற்று முன்பும் தன்னோடு சிலுவையில் தொங்கிய ஒரு மனிதனுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, அவனை இரட்சிப்புக்குள் நடத்தி பிதாவின் சித்தத்தை அங்கு நிறைவேற்றினார்.

நம்முடைய மரண வேளையிலும் நாம் நம்முடைய சிந்தையில் அசுத்தங்கள் வராதபடி நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கிருபைகளை தேவன் எனக்கும் உங்களுக்கும் தருவாராக! நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டுமென்பதும் தேவ சித்தமே.

Iதெசலோனிக்கேயர்4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,

நாம் பாவம் செய்து மீண்டும் இயேசுவை சிலுவையில் அறைந்து அவரை துக்கப்படுத்தாதிருக்க வேண்டிய கிருபைகளை தேவன் நமக்கு தருவாராக! நாம் பரிசுத்தமாய் வாழும்போது இயேசு தான் சிலுவையில் பட்ட பாடுகளை மறந்து சந்தோஷப்படுவார்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

சிந்திக்க சில வரிகள்

இயேசுவுக்கே மகிமை


போதகர் ஒருவர் Orkut ல் Post செய்துள்ள வரிகளை தெரிந்தெடுத்து, அவருடைய அனுமதியுடன், தேவ நாம மகிமைக்காகவும், அநேகருடைய பிரயோஜனத்திற்காகவும் இங்கு வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். நன்றி பாஸ்டர் .


சிந்திக்க சில வரிகள்

தேவனுக்கு முன்பாக மண்டியிடாதவன் உலகத்திற்கு முன்பாக மண்டியிடுவான்.

ஜெப அறையில் அழாதவன் வெளியிலே அழுது கொண்டிருப்பான்.

விதைப்பு இல்லாமல் அறுவடை என்பது என்றுமே இல்லை.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வதற்காகவே எல்லாவற்றையும் இழந்து போகிறான்.

இயேசுவே உனக்கு ஆதாரம் மற்றவையெல்லாம் உனக்கு சேதாரம்.

கற்றுக் கொடுப்பதற்கு ஆசைப்படுவதைக் காட்டிலும் கற்றுக்கொள்ளவே அதிகமாய் ஆசைப்படு.

விசுவாசியின் மூலதனம் விசுவாசமே.

நாம் ஜெயிக்க நமக்குத் தேவை தேவகிருபையே, நம் திறமை அல்ல.

தேவனுக்குத் தேவை உன் உதவி அல்ல - உன் ஒப்புக் கொடுத்தலே.

அன்றைய பிரசங்கம் மற்றவர்களை காக்க. இன்றைய பிரசங்கம் மற்றவர்களை தாக்க.

அன்று : வாழ்க்கை தேவனுக்காக. இன்று : தேவன் வாழ்க்கைக்காக.

கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

சுமை தாங்கி

இயேசுவுக்கே மகிமை

சுமை தாங்கி

மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில்(இயேசு) வாருங்கள்; நான்(இயேசு) உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் சுமக்க முடியாத சுமை ஒன்றை தலையில் வைத்துக்கொண்டு, கிராமத்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது. பாட்டியின் தாங்க முடியாத சுமையை பார்த்த, அந்த வண்டிக்காரனுக்கு பாட்டியின் மேல் அனுதாபம் வந்தது. எனவே அந்த பாட்டியை தன்னுடைய மாட்டுவண்டியில் ஏறும்படி சொன்னான். பாட்டியும் மிக சந்தோஷமாக அந்த மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

சற்று தூரம் சென்ற பின்பு, வண்டிக்காரன் பாட்டியை திரும்பிப் பார்த்தான். பாட்டி இன்னும் அந்த பார சுமையை தன்னுடைய தலையின் மேல் வைத்துக்கொண்டு, வண்டியின் மேல் அமர்ந்திருந்தார்கள். அதை பார்த்த வண்டிக்காரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாட்டியை பார்த்து சொன்னான், பாட்டி அந்த சுமையை வண்டியின் மேல் இறக்கி வைக்கவேண்டியதுதானே என்று. அதற்கு அந்த பாட்டி சொன்னார்களாம், அய்யா எனக்கு உட்கார இடம் கிடைத்ததே சந்தோசம், நான் அந்த சுமையையும் இறக்கி வண்டியின் மேல் வைத்தால் வண்டியை இழுக்கிற மாடு பாவம், அது அந்த சுமையையும் சேர்த்து இழுக்கும்போது அதற்கு சுமை அதிகமாகும் என்றார்களாம். ஆகவே தான் பரிசுத்த வேதம் சொல்லுகிறது,

ஓசியா 4:6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.

ஏசாயா 5:13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கடினமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள், அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.

பழைய காலங்களில் சாலையோரங்களில் சுமைதாங்கி என்ற ஒன்று இருக்கும். வழிப்போக்கர்கள் தாங்கள் களைத்துப்போகும்போது, தங்கள் தலையின் மேல் உள்ள பாரத்தை சற்று நேரம் அந்த சுமை தாங்கியின் மேல் வைத்து இளைப்பாறுவார்கள். மீண்டும் சற்று நேரம் கழித்து அவற்றை சுமந்து செல்வார்கள், ஆனால் அவர்களுக்கு ஒரு நிரந்தர விடுதலையில்லை.

நமக்கோ ஒரு நிரந்தர சுமை தாங்கியாக ஆண்டவர் இயேசு இருக்கிறார். ஆகவே நாம் இன்னும் ஏன் பாரத்தை சுமந்து தவிக்க வேண்டும்? நம்முடைய பாவ பாரமா? இல்லை சாபமா? இல்லை கடன் பாரமா? இல்லை சமாதானக் குறைவா? இல்லை வேலையில்லா திண்டாட்டமா? இல்லை தீராத வியாதியா? எந்த பாரமாய் இருந்தாலும் தன்னுடைய சிலுவை சுமந்த தோளின் மேல் அவற்றையெல்லாம் நிரந்தரமாய் சுமக்க இயேசு ஆவலுள்ளவராய் இருக்கிறார். அந்த பாட்டியை போல நாம் இராத படி, நாம் நம்முடைய எல்லா பாரத்தையும் இயேசு அப்பாவிடம் இறக்கி வைப்போம். அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவார்.

I பேதுரு 5:7 அவர் (இயேசு) உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

நாம் நினைப்பதை விட மிக சமீபம்

இயேசுவுக்கே மகிமை

(கிறிஸ்த்துவுக்குள் அன்பு சகோதரர் ஜி. ஐ. இருதய பிரின்ஸ் அவர்கள் இயேசுவின் வருகையை, நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு, நமது வாசகர்களுக்கு எழுதி அனுப்பிய Article . இதை நாம் வாசிக்கும்போது, நாம் நோவாவின் நாட்களை நினைத்துப்பார்ப்போம். நோவா சுமார் 120 வருடங்கள் பிரசங்கித்தும் மிக சிலராகிய 8 பேர் மட்டுமே பேழைக்குள் பிரவேசித்தனர். ஆம் இன்றும் நம்முடைய நண்பர்கள் எப்படியாகிலும் அழிவிலிருந்து தப்பவேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு, கதைகளாக, கட்டுரைகளாக, கவிதைகளாக சுவிஷேசம் அறிவிக்கப்படுகிறது. காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன் என்று இயேசு சொன்ன பொன் மொழி தான் நமக்கு ஞாபகம் வருகிறது.)

நாம் நினைப்பதை விட மிக சமீபம்

இது வரை கேள்விப்பட்டிராத சம்பவங்கள்; ஒவ்வொரு துறையிலுமே அச்சுறுத்தல்கள்; எவ்வளவுக்களவு வளர்ச்சியோ அவ்வளவுக்களவு நிம்மதி இல்லை; எப்போதும், எதுவும் நடக்கலாம்.

அன்றாட சாமானியனுக்கும் நன்றாகவே புரிந்து விட்டது, இந்த உலகம் வழக்கமான பாதையை விட்டு மாறிச் செல்கிறது என்று. இருக்கும் வரை வாழ்வோம்; இறப்பு வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்துகொண்டு அடிவயிற்றை பிடித்துக்கொண்டு, அடி மேல் அடி வைத்து, வெளியில் ஒரு பொய்யான சிரிப்பை உதிர்த்துக்கொண்டு உலாவுகிறார்கள் இந்த மகா ஜனங்கள்.

ஒரு மனிதனுக்கு ஏதாவது ஆபத்து என்றால், எனக்கு மட்டுமா இது? என்னைப்போன்று எவருக்காவது இப்படி நடக்கத்தான் செய்கிறது என்று 'company' தேடிக்கொள்கிறான். என் வீட்டில் தீ எரிந்தால் அதை விட்டுவிட்டு அடுத்த வீட்டின் நிலை என்ன என்பதே இன்றைய மனிதனின் மனப்பான்மை. பக்கத்துக்கு வீட்டில் பற்றி எரிந்தால் 'அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு...!’- எனக்கு மட்டுமா பிரச்சினை என்று அதே சால்சாப்பு...!!

அந்நாளில் மனிதனின் அன்பு தணிந்து போம் என்பது கடைசி காலத்தை கணித்துக்கொள்ள இயேசு கொடுத்த அடையாள வார்த்தை. தாம் சர்வ வல்லமையுள்ள தெய்வமாக, நியாயம் தீர்க்க , நடு வானில் நீங்களும் நானும் பார்க்க , ' எக்காளம் தொனிக்க' இதோ மேகங்கள் மீதில் வரப்போகிறார்! அதுவே இறுதிக்காலம்! இந்த உலக வாழ்க்கையின் பலனை அடைந்து தீர்க்கும் நியாயத்தீர்ப்பின் காலம்!

இந்த உலகத்தின் தொலைநோக்குதிட்டங்கள், வானளாவிய கட்டிடங்கள், வாழ்க்கை மேம்பாட்டுத் தீர்மானங்கள், சிலரின் சிலம்பாட்ட பேச்சுக்கள் இவைகளை உற்று நோக்கும் போது, ஏதோ இவர்கள் இந்த பூமியில் 1000 ஆண்டுகள் வாழும் வரம் பெற்று வந்தவர்கள் போலத்தோன்றுகிறது. இயேசுவின் வருகைக்கெல்லாம் இன்னும் நீண்ட களம் செல்லும் என்பது இவர்களின் இறுமாப்பு. நீங்கள் உங்கது டூவீலரில் இரண்டு பக்கமும் பொருத்தியிருக்கும் சைடு மிரரில் 'Objects In the Mirror are Closer than they Appear' என்ற வாசகம் பொறிக்கப்படிருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது, உங்களின் பின்புறம் வரும் வாகனம், கண்ணாடியில் தெரிவதைக்காட்டிலும் அருகில் இருக்கிறது என்பதே அந்த எச்சரிப்பு.

அதுபோல, இயேசுவின் வருகையை மிகத் தூரமாய்க்காட்டும் இது போன்ற இந்த உலகின் ஆசா பாசங்களாகிய கண்ணாடிகளை நம்பி மோசம் போய்விடாதீர்கள்.

உண்மையில், இயேசுவின் வருகை மிக சமீபமாய் இருக்கிறது. எனவே , ஆயத்தமாவோம்! பிறரை ஆயத்தப்படுத்துவோம்!

II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

நன்றி : ஜி.ஐ. இருதய பிரின்ஸ்,
டெலிகாம் & நெட்வொர்கிங் எஞ்சினீயர்,
பெங்களூர்.

ஆண்டவராகிய இயேசுவின் வருகையை முதல் நூற்றாண்டிலேயே எதிபார்த்து மாரநாதா என்று ஒருவரை ஒருவர் வாழ்த்தினார்கள். மாரநாதா என்பதற்கு இயேசு வருகிறார் என்று அர்த்தமாம். இயேசு தம்முடைய வருகையைக் குறித்து சொன்ன அடையாளம், அத்திமரம் துளிர்விடும்போது நான் வாசலருகே நிற்கிறேன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று. ஆத்திமரம் என்பது இஸ்ரேல் ஜனங்களின் அரசியல் வாழ்கையும், ஒலிவமரம் என்பது அவர்களது ஆவிக்குரிய வாழ்க்கையையும் குறிக்கும்.

கிறிஸ்த்துவுக்கு முன்பாகவே இஸ்ரேல தேசம் அந்நியர்களிடம் அடிமைப்பட்டுவிட்டது, டேசுவின் நாட்களில் அந்த தேசம் ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் அடிமையாய் இருந்தது. 1948 முன்பாக வரை உலக வரைபடத்தில் இஸ்ரேல என்ற ஒரு தேசம் இல்லை. அந்நாட்களில் அது பாலஸ்தீனா என்று இருந்தது. அப்போது அது இகிலாந்து நாட்டில் காலனி நாடாய் இருந்தது. இந்த நாட்களில் இஸ்ரேலர் உலகமெங்கும் சிதறடிக்கபட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து ஏதோ ஒரு நாட்டிடம் (சரியாக பெயர் ஞாபகமில்லை) போரில் படுதோல்வி அடைந்து கொண்டிருந்தது. அப்போது வேறு வழி தெரியாத இங்கிலாந்து அரசு நமக்கு வெற்றி தேடி தருபவர் யாராக இருந்தாலும் அவர்கள் எதை கேட்டாலும் தருவதாக வாக்குறுதியளித்தனர். அப்போது யூதராகிய டாக்டர் வைஷ்மன் அவர்கள் RDX வெடிமருந்தை கண்டுபிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து பெரும் வெற்றி பெற்றது. டாக்டர் வைஷ்மன் அவர்களிடம் உங்களுக்கு என்னவேண்டும் என்று கேட்டபோது, அவர் யூதர்களாகிய தாங்கள் அடிமைகளாக அலைந்து திரிவதால் தங்களுக்கு, தங்கள் சொந்த நாடு திரும்ப தரப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார். அந்நாளில் பாலஸ்தீனா இங்கிலாந்தின் கீழ் அடிமையாய் இருந்ததால், உடனடியாக டாக்டர் வைஷ்மன் அவர்களை பிரதமராக நியமித்து இஸ்ரேல தேசம் உதயமாயிற்று. அப்போது பாலஸ்தீனிய முஸ்லிம்கள் அதை எதிர்த்து போரிட முயன்றனர். பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கீழ்க்கண்ட வசனத்தின் படி,

ஏசாயா 31:5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

இங்கிலாந்தின் விமானங்கள் பறந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அளித்தது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல சுதந்திரம் அடைந்தது. இயேசு சொன்னபடி அத்திமரம் துளிர்விட்டது. அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்திலேயே கடைசி மணிநேரம் என்று கணிக்கப்பட்டது. அப்படியானால் 1948 ஐ கடைசி நிமிடம் என்று கணிக்கலாம். அப்படியானால் இன்றைய நாட்களை கடைசி வினாடி என்று ஒப்பிடலாம். ஆம் இயேசுவின் வருகை அவ்வளவு சீக்கிரம்.



மாரநாதா! இயேசு வருகிறார்!!

கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

சவால்களை சந்திப்போம்

இயேசுவுக்கே மகிமை

சவால்களை சந்திப்போம்

வாழ்க்கையில் சோதனைகளை, தேவனின் துணையோடு கூட சாதனையாக மாற்றும் போதுதான் வாழ்க்கை சுவையுள்ளதாக அமையும். ஆண்டவரிடம் விவசாயி ஒருவன் கடுமையான சண்டைக்குப் போனான்.

ஆண்டவரே உங்களுக்கு பயிர்களை பற்றி என்ன தெரியும்? நீங்கள் நினைத்தபோது மழையை அனுப்புகிறீர்கள், தப்பான சமயத்தில் காற்றை வீசசெய்கிறீர்கள். உங்களால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல் நீங்கள் இந்த வேலையை விவசாயி ஒருவனிடம் கொடுத்துவிடுங்கள் என்றான்.

உடனே ஆண்டவர் அப்படியா? இன்று முதல் மழை, காற்று, வெளிச்சம் இந்த மூன்றும் உன் கட்டுப்பாட்டிலே இருக்கட்டும், என்று வரம் அருளி விட்டு கடந்து சென்றார். விவசாயிக்கு தாங்க முடியாத சந்தோஷம். அடுத்த பருவம் வந்தது.

விவசாயி மழையே பெய் என்றான், மழை பெய்தது. அதுபோலவே காற்று, வெயில் எல்லாமே அவன் பேச்சுக்கு கீழ்ப்படிந்தது. விதைகளை தூவினான், பயிர்கள் செழித்து வளர்ந்தது, வயல்வெளியை பார்க்கவே படுரம்மியமாக இருந்தது.

அறுவடை காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். திறந்து பார்த்தான், அவன் அதிர்ந்து போனான். காரணம் உள்ளே தானியத்தை காணவில்லை. அடுத்து ஒன்று, வேறொன்று என்று ஒவ்வொரு கதிராக அறுவடை செய்து, ஒவ்வொன்றாக திறந்து பார்த்தான். ஒன்றிலுமே தானியம் இல்லை.

ஆண்டவரே என்று கோபத்தோடு கூப்பிட்டான். மழை, காற்று, வெயில் எல்லாவற்றையும் சரி விகிதத்தில் தானே பயன்படுத்தினேன். ஏன்? பயிர்கள் பாழாகி விட்டது என்று கேள்வி எழுப்பினான்.

ஆண்டவர் அவனைப்பார்த்து புன்னகைத்தார். என்கட்டுப்பாடிளிருந்த போது காற்று வேகமாய் வீசும்படி செய்வேன். அப்போது தாயை இறுகப்பிடித்துக்கொள்ளும் குழந்தையை போல, பயிர்கள் தங்களுடைய வேர்களை ஆழமாய் அனுப்பி வேர் பிடித்துக்கொள்ளும். மழை குறையும் போது, தண்ணீரை தேடி வேர்களை ஆழாமாய் அனுப்பும். போராட்டம் இருந்தால் தான் தாவரங்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு வலுவாக வளரும். எல்லாவற்றையும் வசதியாக அமைத்துக்கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்து விட்டது. தள, தளவென வளர்ந்ததே தவிர அவற்றால் ஆரோக்கியமான தானியத்தை கொடுக்க முடியவில்லை.

விவசாயிக்கு போதும், போதுமென்று ஆகிவிட்டது. வேண்டாமடா இந்த மழையும், காற்றும், வெயிலும். நீங்களே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுங்கள் ஆண்டவரே என்று திரும்ப அவரிடமே ஒப்படைத்துவிட்டான். ஆம் வாழ்க்கை எல்லாவிதத்திலும் சௌகர்யமாய் அமைந்து விட்டால், அதைபோன்றதொரு வெறுமை வேறெதுவும் இல்லை.

பிரச்சனைகள் நம்மை போட்டு அழுத்தும் போது தான் நம் திறமை அதிகரிக்கும். சவால்கள் தான் நம்மை முழுமனிதனாக மாற்றும்.

ரோமர் 5:

3. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,

4.
உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

இன்று ஒரு கேள்வி – 7

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 7


இன்றைய நவீன காலத்தில் கால்சென்றர் போன்ற புதிய தொழில்களால், இரவு(முழு இரவு) நேர பணி பல தொழில் நகரங்களில் வேகமாக பரவி, நடந்து வருகிறது. இப்படி தொடர்ந்து இரவு நேர பணிகளால் மனிதனின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மேலும் பாவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வேதாகமம் நாம் உழைத்து, பணி செய்ய நமக்கு எந்த வேளை சிறந்தது என்று நியமித்துள்ளது. உங்கள் கருத்துக்களை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம். மருத்துவர்கள் இருந்தால் இதினிமித்தம் மனிதனுக்கு வரும் தீமைகளை மருத்துவ ரீதியாக எழுதி அனுப்பலாம்.


1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 28.05.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

15.05.2010 அன்றைய இன்று ஒரு கேள்வி 6” க்கான சரியான விடைகள்.



தாவீது கோலியாத்தை கொன்று, வெற்றியோடு திரும்புகையில் பெண்கள் நடனமாடி; சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை, முறையாக பாடினர். இப்படி பாடியதால் சவுல், தாவீதின் மேல் பொறாமைகொண்டான். இது சவுலுடைய ராஜ்யபார வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. அந்த பெண்கள் பாடியது தவறா? இல்லை சவுல் புரிந்து கொண்டது தவறா?


வேதவசனத்தின் படி ஒரு மனிதன் தேவனுடைய துணையோடு கூட ஒரே நேரத்தில் ஆயிரம்பேரை(சத்துருவை) துரத்தலாம்.

யோசுவா 23:10 உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

ஆனால் இருவர் ஒருமனமாய் ஜெபித்தால்(யுத்தம்பன்னினால்) இது பத்து மடங்கு அதிகமாய் இருக்கும்.

ஒருவன் – 1000

இருவர் – 1000 X 10 = 10000

உபாகமம் 32:30 அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

அந்த பெண்கள் இந்த வேத வசனத்தின் படி சவுல் தனியாக கொன்றது ஆயிரம், தாவீதோடு சேர்ந்து கொன்றது பதினாயிரம் என்ற அர்த்தத்தில் பாடியிருக்கலாம். ஆகவே அந்த பெண்கள் பாடியதில் தவறில்லை. சவுல் புரிந்து கொண்டதே தவறு.

தேவனுடைய துணையோடு ஒருவன் ஆயிரம் பிசாசுகளையும், இருவர் பதினாயிரம் பிசாசுகளையும் துரத்த முடியுமானால், இதியாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராயிருந்தாலும் சுமார் ஐந்து கோடி மக்களாகிலும் இருப்பார்கள் என்று கருதுகிறேன். ஐந்து கோடி தேவ ஜனமும் ஒருமனப்பட்டு, தேவனும் இணைந்தால் இந்தியாவிலுள்ள அசுத்த ஆவிகளை, பிசாசின் வல்லமைகளை, மூட பழக்கவழக்கங்களை எழிதில் ஜெயித்துவிடலாம்.

படிப்பறிவுள்ள இந்தியாவில் மழை பெய்யாவிட்டால் தவளைக்கு திருமணம், கழுதைக்கு திருமணம், வேப்பமரத்திற்கு திருமணம். இப்போதே இந்தியாவின் மூடப்பழக்கவழக்கங்கள் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். இது மக்களின் அறியாமையா? இல்லை சத்துரு அவர்கள் கண்களை மறைத்து வைத்துள்ளானா?

ஆனால் இவைகளை எதிர்த்து சத்துருவுக்கு எதிராய் ஜெபத்தில் போராடவேண்டிய கிறிஸ்தவர்களாகிய நாமோ நீ R . C, நான் C. S. I, அவன் லுத்தரன் , மற்றொருவன் பெந்தெகொஸ்தே என்று பிரிவினைக்குள் மூழ்கிபோயுள்ளது. நமது தலைமுறையிலாகிலும் இந்த சாபக்கேடு மாறுமா? வாலிப நண்பர்களே. நண்பர்களே உங்களுக்கு அறைகூவல் விடுத்து அழைக்கிறேன் சபை பாகுபாடை மறந்து ஓரணியில் திரள. ஒரு மனமாய் இருந்து தேவ ராஜ்யத்தை கட்டுவோம். இந்தியாவின் மூடபழக்கவழக்கங்களை வேரறுப்போம்.

நமக்கு தலை கிறிஸ்த்து, நாம் ஒவ்வொருவரும் அவர் சரீரத்தின் உறுப்புகள். ஆகவே சபை பாகுபாடு நமக்கு தேவையில்லை.


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.