இயேசுவுக்கே மகிமை
உண்மையும் உத்தமமும் - சிறுகதை
டேய் சுரேஷ் எப்டிடா இருக்கிற? நான் நல்லா இருக்கிறேன்டா. நீ எப்படிடா இருக்கிற ரமேஷ்? நானும் நல்லா இருக்கிறேண்டா. அமெரிக்கால இருக்கிறேன். போன வாரம் தான் ஊருக்கு வந்தேன்டா. அமெரிக்காவில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் மானேஜரா இருக்கிறேன். நீ என்ன பண்ற சுரேஷ்? நான் கோயம்புத்தூர்ல ஒரு கம்பெனியில் Trainee ஆ இருக்கிறேண்டா. டேய் சுரேஷ் என்னடா சொல்ற? Trainee யாவா. ஆமாடா. ஏண்டா? என்னாச்சு உனக்கு ? டேய் ரமேஷ் எங்க கம்பெனியில அப்பாய்மென்ட் ஆர்டர், சாலரி ஸ்லிப் எதுவுமே தரமாட்டாங்கடா. கம்பெனியில join பண்ணும்போது ஒரு வருஷத்துல பிரமோசன் பண்ணுவோம்னு சொன்னாங்கடா, ஆனா எதுவுமே பண்ணல. எங்கே இண்டர்வியூ போனாலும் பழைய கம்பெனியோட அப்பாய்மென்ட் ஆர்டர், சாலரி ஸ்லிப் கேக்கிறாங்கடா. என்னப் பண்றதுன்னே தெரியல.
டேய் நீ சரியான லூசு. ஒரு போலி அப்பாய்மென்ட் ஆர்டர், சாலரி ஸ்லிப் ரெடி பண்ண எவ்வவளவு நேரம்டா ஆகும். ஆகுற வேலைய விட்டுட்டு புலம்பியிட்டு இருக்கிற.
டேய் அது... அது... பைபிள்ல உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான்னு சொல்லியிருக்கே. எப்டிடா துணிகரமா பொய் சொல்லி போலி டாக்குமென்ட் ரெடி பண்றது? டேய் சுரேஷ் நீயெல்லாம் உருப்படுறமாதிரி தெரியலடா.
டேய் ரமேஷ் அப்படியெல்லாம் சொல்லாதடா. நீ என்னோட எதிகாலத்த பாருடா பிரகாசமா இருக்கும். கர்த்தருடைய சத்தியமுள்ள வார்த்தை கூறுகிறது, அவர்கள் அவரை நோக்கிப் பார்த்து பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்பட்டுப் போனதில்லை என்று. ஆகவே நான் ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லைடா.
வீர வசனமெல்லாம் பேசிறீயே ஒன்னோட salary என்னடா? 7000 Rs வாங்கிறேண்டா. டேய் கேவலம்டா இண்ணைக்கு B.E முடிச்சவனே 18000 ரூபா salary வாங்கிறாண்டா. நீ B.E முடிச்சு 5 வருஷம் ஆகுதுடா. உன்ன நெனச்சா எனக்கு கேவலமா இருக்குது.
டேய் ரமேஷ் கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பத்துல அப்படிதாண்டா இருக்கும். இயேசுவை பாரு, சிலுவையில ஆணியடிச்சு கொன்னுட்டா அதோட முடிஞ்சுன்னு நெனச்சாங்க. அதோட இயேசு தோற்று போயிட்டார்னு நெனச்சாங்க. ஆனா மூன்றாவது நாள் அவர் வெற்றி சிறந்து உயிர்த்தெழுந்தார். ராஜாதி ராஜாவாய் இன்றும் அநேகருடைய உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
டேய் யோசேப்ப பாருடா, அவனை குழியில போட்டாங்க, அடிமையாய் விற்றுப் போட்டாங்க, சிறைச்சாலைக்கு அனுப்பினாங்க. அவனுடைய வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு நெனச்சாங்க. ஆனா... அனா…. அப்படியெல்லாம் நடக்கல. சிறைசாலைல இருந்து எகிப்தின் அரண்மனையின் சிங்காசனத்துக்கு உயர்த்தப்பட்டான். டேய் ரமேஷ் கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பத்துல தோல்விபோல காணப்பாட்டாலும், தோல்வி நம்முடையதல்ல. நாம் ஜெயிக்கும்படி அழைக்கபட்டவங்கடா, இதை நல்லா புரிஞ்சுக்க.
டேய் சுரேஷ் ஒருவேளை நீ நெனைக்கிற மாதிரி எதுவும் நடக்கலண்ணா என்னடா பண்ணுவ? டேய் அப்படி சந்தேகப்படக் கூடாதுடா. நாம் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண முடியும்.
இல்லடா ஒருவேளை நீ நெனைக்கிற மாதிரி எதுவுமே நடக்கலன்னு வச்சுக்கோ, என்னப்பண்ணுவ நீ? டேய் நிச்சயமா அப்படி ஆகாதுடா. நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று நான் அறிந்திருக்கிறேன். இருந்தாலும் நீ திரும்ப, திரும்ப கேட்கிறதினால சொல்றேண்டா, நான் நெனச்ச மாதிரி ஒண்ணுமே நடகலண்ணாலும் நான் இயேசுவையே பின்பற்றுவேண்டா. தேவன் நியமித்த நாட்களை அவருடைய கிருபயோடே வாழ்ந்து முடிப்பேன். ஒரு நாள் நான் மரித்து போன பின்பு பரலோகத்தின் வாசலில் போய் நின்று என் இன்ப பரலோகத்தின் கதவை தட்டுவேன். அப்போது ஆண்டவராகிய இயேசு தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார்,
ஏசாயா 26:2 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள் என்று.
அப்பொழுது நான் ஆண்டவராகிய இயேசுவின் வெண்சிங்காசனதிற்கு முன்பாக போய் நின்று ஆசையாய் அவர் திரு முகத்தை பார்ப்பேன். அப்பொழுது அவர் தம் வெண்சிங்காசனத்தை விட்டு எழுந்து நின்று என்னை வரவேற்று அவர் சொல்லுவார்,
மத்தேயு 25:21 உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று.
அப்பொழுது நான் ஆண்டவராகிய இயேசுவின் திரு மார்பில் சாய்ந்து என் கவலைகளை எல்லாம் மறந்து இளைப்பாறுவேன்டா.
இயேசுவே போதும்
என் இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும், மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்.
நீதிமொழிகள் 28:20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;
சங்கீதம் 84:11 தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
II நாளாகமம் 19:11 உத்தமனுக்குக் கர்த்தர் துணை.
கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment