Monday, April 19, 2010

என் இனிய பரலோகமே

இயேசுவுக்கே மகிமை

என் இனிய பரலோகமே

சங்கீதம் 48:2 வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.

பரலோக ராஜ்யம் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள நாம் யாவரும் மிகவும் ஆர்வமுள்ளவர்களே. ஆனால் பரலோக ராஜ்யத்தை நாம் இந்த பூமியிலுள்ள யாதொன்றுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாத மிக பிரமாண்டமானது. ஆனாலும் நாம் புரிந்து கொள்ளும் படி சாலமோன் கட்டிய தேவாலயத்துடன் ஓர் கண்ணோட்டம்.

சாலமோன் கட்டிய தேவாலயம், வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி இன்றைய மதிப்பில் சுமார் 10000 கோடி ரூபாய் செலவு பண்ணி, சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த தேவாலயத்தை பார்த்த சேபாவின் ராஜ ஸ்திரீ ஆச்சர்யத்தால் பிரமை கொண்டாள். தேவாலயத்தின் எல்லா ஒழுங்குகளையும், நேர்த்தியையும், அழகையும் பார்த்த அவள் மதி மயங்கிப்போனாள்.

I ராஜாக்கள் 10

4. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,

5.
அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,

6.
ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.

7.
நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.

8.
உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

பரலோக ராஜ்யத்தை இஸ்ரேல தேசத்துடன் ஒப்பிட்டால் அதிலுள்ள சீயோன் மலை மிக உயர்ந்ததாகும். அதுபோல ஆண்டவராகிய இயேசுவின் சிங்காசனம் இருக்குமிடம், பரலோகத்தில் சீயோன் என்றழைக்கப்படும். சீயோனுக்கு சற்று கீழாக இருப்பது எருசலேம் மலை ஆகும். இது பரிசுத்தமாய் வாழ்ந்து, தேவ சித்தத்தை பூரணமாய் செய்துமுடித்த பூரணமாக்கப் பட்ட நீதிமான்கள் இருக்குமிடம். இதை பரம எருசலேம் என்கிறார்கள்.

எபிரெயர் 12 :

22.
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,

23.
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,

24.
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.

பரலோக ராஜ்யமோ சுமார் 2000 ஆண்டுகளாக சர்வ வல்லமையுள்ள தேவனால் கைவேலையில்லாமல் அவருடைய ஞானத்தினால் தங்கம், வைரம் மற்றும் முத்துக்களால் கட்டப்பட்டட்டுக் கொண்டிருக்கிறது. வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி பரலோகம் சுமார் 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடையது. இது சாலமோன் கட்டிய தேவாலயத்தை பார்க்கிலும் பல ஆயிரம்கோடி மடங்கு விசேஷித்தது. நாம் பரலோக ராஜ்யதிற்குள் பிரவேசிக்கும் போது சேபாவின் ராஜ ஸ்திரீயை போல பரலோகத்தின் பிரமாண்டத்தை பார்த்து பிரமித்து நிற்போம்.

தேவனுடைய மகிமையடைந்த பரம எருசலேம்

வெளி 21 :

1. பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

2.
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

4.
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

5.
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

6.
அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

7.
ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

8.
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

10. பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

11.
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

12.
அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

15.
என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.

16.
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்;

18.
அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.

19.
நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

20.
ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.

21.
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

22.
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

23.
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

24.
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்

25.
அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.

27.
தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

மேலும் பாவமன்னிப்பு மட்டுமிருந்து, தேவ சித்தம் செய்யாமல், ஞானசிநானம் எடுக்காமல் இருப்பவர்கள் பரம எருசலேமில் பிரவேசிக்க முடியாது. இயேசு யோவான் 14 : 2 ல் சொன்ன படி என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலம் உண்டு என்று சொன்ன படி புதிய வானம், புதிய பூமி என்ற இடங்களில் இவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கலாம். மேலும் பழைய எற்பாட்டு பரிசுத்தவான்கள் தங்களுடைய பாவங்களை நியாயப்பிரமாண முறைப்படி காளை, ஆட்டுக்கடா இவைகளுடைய ரத்தத்தினால் மறைத்தார்கள். ஆனால் இவர்களுக்கு இயேசுவின் ரத்தத்தினால் பூரணமாய் பாவம் மன்னிக்கப்படவில்லை. ஆகவே இவர்களும் பரம எருசலேமில் பிரவேசிக்க முடியாது என்று நான் கருதுகிறேன்.

பரிசுத்த வேதாகமத்தில் அநேக காரியங்கள் உவமையாகவே சொல்லப்பட்டுள்ளது. அதுபோல இந்த காரியங்களை ஒரு திருமணத்துடன் ஒப்பிட்டால், அந்த நிகழ்ச்சியில் மணவாளனும், மணவாட்டியுமே மிக முக்கியமானவர்கள். இதில் இயேசுவை மணவாளனாகவும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை மணவாட்டியாகவும் வேதம் ஒப்பிட்டுள்ளது. மேலும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மணவாளனின் தோழனாகவும், வருகையில் கைவிடப்பட்டு அந்திக் கிறிஸ்த்துவின் காலத்தில் ரத்த சாட்சியாய் மரிப்பவர்கள் மணவாட்டியின் தோழியாகவும் இருப்பார்கள். இது உவமையாக கூறப்பட்டது. மற்ற படி பூமியிலுள்ள திருமணத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இயேசு நம்முடைய பரம பிதா, நாம் அவருடைய அன்பு பிள்ளைகள்.

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதிகள் :

1. மத்தேயு 18:3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2. மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

3. யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

4. மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5. அப்போஸ்தலர் 14:22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.


மத்தேயு 5 :


6. 3.ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

7. 10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.


ஏசாயா 35:10 கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment