இயேசுவுக்கே மகிமை
என் ஆத்ம நேசர் இயேசு
உன்னதப்பாட்டு 3:11 சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய இயேசுவின் சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய பிதாவாகிய தேவன் தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.
பதினாயிரங்களுள் சிறந்தவராம் இயேசுவின் அழகு :
இயேசு ஆயிரம், பதினாயிரம் பேர்களில் வெகு அழகானவர். இயேசுவுக்கு இணையாய் இந்த பூமியில் அழகிற்சிறந்தவர் ஒருவருமில்லை. இந்த பூமியில் எவ்வளவு அழகாக ஒருவர் இருந்தாலும், அவர்களை கூர்ந்து கவனித்தால் அவர்களில் பல குறைகளை கண்டுபிடிக்க முடியும். அதாவது அவர்களுடைய மூக்கு சற்று கோணலாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய பல் சற்று முன்பாக நீட்டிக் கொண்டிருக்கலாம். இப்படி ஏதோ ஒரு குறை இருக்கலாம். ஆனால் நான் இங்கு சொல்லும் என் ஆத்ம சிநேகிதர் இயேசுவோ முற்றிலும் அழகானவர், இவரில் யாரும் பழுதொன்றும் கண்டுபிடிக்க முடியாத பூரண அழகுள்ளவர். தலை தங்க மயமான தேவன்.
இயேசுவை ஓர் பட்டை தீட்டிய வைரத்துடன் ஒப்பிட்டால் அவருடைய ஒளி பலவாறாக இருக்கும். ஒரு பட்டை தீட்டிய வைரத்தை, விளக்கு வெளிச்சத்தில் வைத்து பார்த்தால் அதின் ஒரு முகப்பிலிருந்து பொன்மயமான மஞ்சள் ஒளி வீசும், அதை சற்று திருப்பி இன்னொரு முகப்பை பார்த்தால் அதிலிருந்து வெண்மையான ஒளி வீசும். அது போல ஆண்டவர் இயேசுவை வேத வசன வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் அவரை நாம் ஆராதிக்கும் போது அவருடைய முகத்திலிருந்து பொன் மயமான ஷக்கினா மகிமை மஞ்சள் நிறத்தில் வீசுவதை காணலாம். நாம் அவருடைய பரிசுத்தத்தை குறித்துப் பார்த்தால் அவருடைய முகத்திலிருந்து வெண்ணிறமான ஒளி வீசுவதை காணலாம். நாம் அவருடைய தியாகத்தை குறித்து பார்க்கும் போது, அவருடைய முகத்திலிருந்து அழகிய சிகப்பு நிற ஒளி வீசுவதை காணலாம். அவர் சிலுவையில் நமக்கு கொடுத்த செழிப்பையும், ஆசீர்வாதத்தையும் நாம் தியானித்தால் அவர் முகத்திலிருந்து பச்சை நிற ஒளி வீசுவதை நாம் பார்க்கலாம்.
உன்னதப்பாட்டு 5 :
9. ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதில் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
10. என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
11. அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.
12. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது
13. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும்
14. அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
15. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.
16. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.
சர்வ வல்லமையுள்ள தேவன் இயேசுவின் தோற்றம் :
தானியேல் 10 :
5. என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.
6. அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.
வெளி 1 :
13. அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
14. அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;
15. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
16. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.
17. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
இயேசுவின் இடி முழக்கம் போன்ற சத்தம் :
சங்கீதம் 29 :
4. கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5. கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
6. அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
7. கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.
8. கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
9. கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
இயேசுவின் பராக்கிரமம் :
ஏசாயா 40 :
12. தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
13. கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
இயேசு யார் ?
I திமோத்தேயு 6:
15. அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக.
இந்த இயேசுவை பார்க்க முடியுமா? அதற்கான தகுதிகள் என்ன?
1. மத்தேயு 5:8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
2. எபிரெயர் 12:14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
இயேசு
ரொம்ப ரொம்ப நல்லவங்க1
கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment