இயேசுவுக்கே மகிமை
இன்று ஒரு கேள்வி – 4
சங்கீதம் 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். மேற்கண்ட வசனத்தின்படி பூமி மாத்திரமே மனுஷனுடைய குடியிருப்புக்காக தேவன் நியமித்திருக்கிறார். ஆனால் விஞ்ஞானிகளோ சந்திரனில் மனிதன் வாழ முடியுமென கருதி அங்கு குடியிருப்புகளை கட்ட முயற்சிக்கிறார்கள். இது சத்தியமா? மனிதன் சந்திரனில் வாழ முடியுமா? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.
1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.04.2010 .
2 . சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
3 . இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
4 . நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com
5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.
17.04.2010 அன்றைய “இன்று ஒரு கேள்வி – 3” க்கான சரியான விடைகள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து வெளிப்படுத்தின விசேஷத்தில் தன்னைக் குறித்து சொல்லும் போது நான் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறேன் என்றார். அவர் எதைக் குறிக்கும் படி அப்படிச் சொன்னார்?
பரிசுத்த வேதாகமத்தில் சில இடங்களில் ஆவியானவர், சில விஷயங்களை சற்று வித்தியாசமாக நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இஸ்ரேலை காக்கிற தேவன் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை என்று ஒரு வசனமுண்டு. இதில் தூங்குவதும், உறங்குவதும் ஒன்று தான். அது போல வட்டிக்கு கொடாமலும், பொலுசை வாங்காமலுமிருப்பயாக என்றொரு வசனமுண்டு. இதில் வட்டி என்பதும், பொலுசை என்பதும் ஒன்றே.
அதுபோலவே இயேசு தன்னைக் குறித்து சொல்லும்போது நான் அல்பாவும், ஒமேகாவும், ஆதியும், அந்தமுமாயிருக்கிறேன் என்றார். அதாவது அல்பாவும், ஒமேகாவும் என்பதை தான் மீண்டும் ஆதியும், அந்தமும் என்று சொன்னார். ஆங்கிலத்தில் முதல் எழுத்து A , கடைசி எழுத்து Z , அதுபோல கிரேக்க மொழியில் அல்பா என்பது முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. துவக்கமும், முடிவும் அல்லது ஆதியும், அந்தமும் நானே என்பதை குறிக்கும் படி அப்படி சொன்னார்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment