Wednesday, April 7, 2010

இயேசுவின் வருகையின் நேரம்

இயேசுவுக்கே மகிமை

இயேசுவின் வருகையின் நேரம்

கர்த்தராகிய இயேசுவின் வருகை எப்போது என்று வெளிப்படுத்தப் படவில்லை. ஆனால் திருடனைப் போல வருவேன் என்று நம்முடைய ஆண்டவர் இயேசு நமக்கு கூறியுள்ளார்.

ஆனால் அவருடைய வருகை அதிகாலை, நண்பகல், மாலை மற்றும் நடு இரவு என்னும் நான்கு வேளையில் ஒரே நேரத்தில் இருக்கும். அதாவது இந்தியாவில் அதிகாலையாக இருக்கும் போது மற்றொரு நாட்டில் நண்பகலாகவும், இன்னொரு நாட்டில் மாலை வேளையாகவும், இரவு வேளையாகவும் இருக்கும். இதை வேதாகமத்தில் கீழ்வரும் உவமையாக ஆண்டவர் கூறியுள்ளார்.

மத்தேயு 24:


40. அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.

41.
இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.

லூக்கா 17:

34. அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.

35.
திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.

36.
வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளப் படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மேற்கண்ட வசனங்களில் வயலில் வேலை செய்பவர், திரிகையில் மாவரைப்பவர், படுக்கையில் படுத்திருப்பவர் என்று உவமை படுத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேளையை குறிப்பதாகும். அதாவது இதில் வயலில் வேலை செய்பவர்கள் நண்பகல் வேளையில் வேலை செய்வார்கள். இது நண்பகல் வேளையை குறிக்கிறது. மாவரைப்ப்வர்கள் சாயங்காலத்தில் மாவரைப்பார்கள். இது சாயங்கால வேளையை குறிக்கும். படுக்கையில் படுத்திருப்பது இரவு வேளையை குறிக்கும். மேலும் சேவல் கூவும் வேளை அதிகாலை வேளையை குறிக்கும்.

மாற்கு 13:35 அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.

வெளிப்படுத்தினவிசேஷம் 22:20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

மாரநாதா ! இயேசு வருகிறார் !! கர்த்தராகிய இயேசுவே, வாரும் !!!

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment