Thursday, April 15, 2010

ஜெபத்தின் மேன்மை

இயேசுவுக்கே மகிமை

ஜெபத்தின் மேன்மை

சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

சங்கீதக்காரனாகிய தாவீது நமது அருமை ஆண்டவருக்கு ஒரு பெயர் சூட்டியுள்ளான் "ஜெபத்தை கேட்கிறவர்" என்று. ஆம் நாம் தொழுதுகொள்ளுகிற போதெல்லாம் நமக்கு சமீபமாய் இருந்து நமது பிரார்த்தனையை கேட்கிற தேவன் ஆண்டவர் இயேசு மாத்திரமே.

சில வருடங்களுக்கு முன்புவரை, யோசுவா கட்டளையிட்ட போது சூரியன் ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றதுதான் வேதத்திலுள்ள மிகப்பெரிய அற்புதம் என்று நினைத்திருந்தேன்.

யோசுவா 10 :

12. யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

13.
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.

14.
இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

ஆனால் ஒரு நாள் புதிய ஏற்பாட்டை படித்துக் கொண்டிருந்த போது அதைவிட மிகப்பெரிய அற்புதமொன்றை கண்டுபிடித்தேன். ஒரு சாதாரண குருடனாகிய பிச்சைக்காரன், அழுக்கு வஸ்திரம் தரித்தவன் ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட போது அண்டசராசரங்களையும் ஒரு வார்த்தையினால் படைத்தவரும், சமுத்திரத்தின் அலைகளின் பெருமையை ஆளுகிறவரும், சமுத்திரத்தின் தண்ணீரின் மேல் நடந்தவரும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவருமான நீதியின் சூரியன் இயேசு நின்றார். இவ்வளவு பெரிய தேவன் சாதாரண பிச்சைக்காரனின் ஜெபத்தைக் கேட்டு நின்றது மிகப்பெரிய அற்புதம் தானே?

லூக்கா 18 :

37. நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன் இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.

38.
முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

39.
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.

40.
அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:

41.
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான்.

42.
இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

அதே மனதுருக்கமுள்ள ஆண்டவர் இயேசு நமக்கும் சொல்லுகிறார் நீங்கள் என் நாமத்தினாலே எதை கேட்டாலும் தருவேன் என்று.

யோவான் 14 : 14. என் (இயேசுவின்) நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

ஜெபமே ஜெயம்! ஜெபமில்லையேல் ஜெயமில்லை!!

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment