Saturday, April 17, 2010

இன்று ஒரு கேள்வி – 3

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 3


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து வெளிப்படுத்தின விசேஷத்தில் தன்னைக் குறித்து சொல்லும் போது நான் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறேன் என்றார். அவர் எதைக் குறிக்கும் படி அப்படிச் சொன்னார் என்ற உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.


1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 23.04.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சலில் வெளியிடப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

10.04.2010 அன்றைய இன்று ஒரு கேள்வி - 2 க்கான சரியான விடைகள்.


1. முதல் நூற்றாண்டின் எழுப்புதலுக்கு காரணம் பவுலா? பேதுருவா?


நமது நடுவர்க் குழுவின் கருத்து


ஆண்டவராகிய இயேசுவின் நாட்களிலும் யார்ப்பெரியவர்? என்று சீஷர்களுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அது போலவே இந்நாட்களிலும் யார்ப்பெரியவர்? எந்த ஊழியம் பெரியது? என்று நமக்குள்ளும் கேள்விஎழுவது வழக்கம். முதல் நூற்றாண்டின் எழுப்புதலுக்கு காரணம் பவுலா? பேதுருவா? என்றால் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்

I கொரிந்தியர் 3:6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.

I கொரிந்தியர் 3:7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.

ஆம் பவுலும் பேதுருவும் செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தார்கள். ஆனால் அவர்களை தேவன் எதற்காக அழைத்தாரோ அதற்கு தக்கதாக கிருபையைக் கொடுத்தார். ஆகவே இன்றைய நாட்களிலும் நாம் மிகப் பெரிய அளவில் கிருபையை பெற்ற ஊழியர்களைப் பார்த்து நாமும் அதுபோலவே மாற வேண்டும், அது போலவே நாம் செய்ய வேண்டுமென்று நினைப்பது தவறு.

I கொரிந்தியர் 7:17 தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.

நம்மை தேவன் பத்து ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய அழைத்திருந்தால் நாம் பத்து ஆத்துமாக்களை ஆதாயம் செய்தால் தாராளமாய் போதுமானது. அதுபோலவே மற்றொருவரை நூறு ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய தேவன் அழைத்திருந்தால் அவர் நூறு ஆத்துமாக்களை ஆதாயம் செய்தாக வேண்டும். அப்படி முறையே ஒவ்வொருவரும் பத்து மற்றும் நூறு ஆத்துமாக்களை ஆதாயம் செய்தால் பரலோகத்தில் இருவருக்கும் சம அளவு கனமும், மகிமையும் கிடைக்கும் என்று நான் கருதுகிறேன். மாறாக முதலாமவர் பத்து ஆத்துமாவும், இரண்டாமவர் தொண்ணூறு ஆத்துமாவும் ஆதாயம் செய்திருந்தால் பரலோகத்தில் முதலாமவருக்கு அதிக கனமும், மகிமையும் இரண்டாமவருக்கு சற்று குறைவான கனமும், மகிமையுமே கிடைக்குமென நான் கருதுக்றேன். காரணம் முதலாமவர் நூறு சதவீதம் தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்து முடித்தார். ஆனால் இரண்டாமவர் தொண்ணூறு சதவீதம் மட்டுமே செய்து முடித்துள்ளார்.

மத்தேயு 25:15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.

லூக்கா 12:48 எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்

ஆகவே நமது நடுவர்க் குழுவின் கருத்து, அவரவருக்கு தேவன் கொடுத்த கிருபையின் படி தங்களுடைய ஊழியத்தை நிறைவேற்றி முடித்த தேவ ஊழியர்கள். முதல் நூற்றாண்டின் எழுப்புதலுக்கு இருவருமே முக்கிய பங்காற்றியவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு வேண்டிய கிருபையை கொடுத்தவரும், எழுப்புதலை கட்டளையிட்டவரும் தேவனே.

எபேசியர் 4:7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment