Tuesday, April 13, 2010

தேவனை தேடினேன்

இயேசுவுக்கே மகிமை

தேவனை தேடினேன்


தேவனை தேடுகிறவர்களே உங்கள் இருதயம் வாழும் சங் 69 : 32


என்னால் நல்ல பட்டங்களை பெற முடிந்தது;
ஆயினும் நல்ல பண்புகளை பெற தேவனை தேடினேன்.


என்னால் நல்ல வேலையை பெற முடிந்தது;
ஆயினும் அதனை உண்மையாய் செய்திட தேவனை தேடினேன்.


என்னால் நல்ல வீட்டை கட்ட முடிந்தது;
ஆயினும் அதற்குள் அமைதியாய் வாழ்ந்திட தேவனை தேடினேன்.


என்னால் நல்ல சௌகர்யங்களை பெற முடிந்தது;
ஆயினும் அந்த சௌகர்யங்களினால் மகிழ்ந்திட தேவனை தேடினேன்.


என்னால் அழகான ஒரு பெண்ணை மணக்க முடிந்தது;
ஆயினும் அழகான ஒரு வாழ்க்கை வாழ தேவனை தேடினேன்.

என்னால் நன்மைகள் பல செய்ய முடிந்தது;
ஆனால் நான் நல்லவனாய் இருக்க தேவனை தேடினேன்.


என்னால் உயர் கல்வியை பெற முடிந்தது;
ஆனால் உயர்ந்த ஒரு வாழ்க்கை முறைக்காக தேவனை தேடினேன்.


என்னால் உறவுகள் பல பெற முடிந்தது;
ஆனால் ஏன் ஆத்மா உறவுக்காக தேவனை தேடினேன்.


என்னால் சாதனைகள் பல பெற முடிந்தது;
ஆனால் சோதனையில் ஜெயம் பெற்றிட தேவனை தேடினேன்.


என்னால் விரோதிகளை சமாளிக்க முடிந்தது;
ஆனால் நண்பர்களால் பாதிக்கப்படாதிருக்க தேவனை தேடினேன்.


நான் நினைத்தவைகளை என்னால் அடைய முடிந்தது;
ஆனால் எனக்கு அவசியமானதை பெற தேவனை தேடினேன்.


என்னை சுற்றிலும் பலரை காண முடிந்தது;
ஆனால் என்னோடு எங்குமிருக்க தேவனை தேடினேன்.


கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment