இயேசுவுக்கே மகிமை
டைட்டானிக் கப்பல்
மத்தேயு 24:3 சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
இந்த உலகத்துக்கு முடிவு உண்டாகுமா? இந்த உலகம் அழிந்து போகுமா? என்றால் அநேகர் ஆச்சர்யப்படுகிறார்கள். காரணம் அவ்வளவு பிரமாண்டமான உலகம். கோடி கோடியாய் செலவு செய்து கட்டிய வானளாவும் உயரமுள்ள கட்டிடங்கள். மனிதன் தன்னுடைய ஞானத்தால் எதையுமே சாதித்து விடலாம் என்ற சூழ்நிலை. மட்டுமல்ல தன்னுடைய ஞானத்தினால் வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை கணித்து அவைகளை தடுத்து நிறுத்தலாம் எனபது மனிதனுடைய நம்பிக்கை.
ஆகவே இவற்றை எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு கூட்டம் மக்கள் சொல்லும் நாடகம் என்றே மக்கள் நினைக்கிறார்கள். ஆகவே தான் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது,
மத்தேயு 24:37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
லூக்கா 17:26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
லூக்கா 17:32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
சிறு வயதிலேயே கண்டிப்புடன் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டதால் சினிமாப் பார்க்கும் பழக்கமில்லை. அதின் மீது விருப்பமுமில்லை. ஆனால் டைட்டானிக் என்ற சினிமாவை பற்றி பலர் ஆச்சர்யப்பட்டதால், என்னதான் பிரமாண்டம் பார்க்கலாமே என்று தமிழில் டப்பிங் செய்த டைட்டானிக் படத்தை பார்த்தேன்.
ஆனால் அதில் மிகப்பெரிய ஆவிக்குரிய பாடம் ஒன்று உள்ளது. அந்தக் கப்பல் போய் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் கதாநாயகி, கப்பலின் கேப்டனை பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். ஐயா இவ்வளவு கோடி செலவு செய்து இவ்வளவு பிரமாண்டமாய் கப்பலை கட்டியிருக்கிறீர்கள், ஆனால் மீட்ப்பு படகுகளோ மிகக் குறைவாகவே வைத்துள்ளீர்கள், ஏன்? என்று கேட்டாள். கப்பலின் கேப்டன் சொன்னான் ஆண்டவனே நினைத்தாலும் இந்த கப்பலை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே மீட்பு படகுகளே தேவையில்லை என்று. சிலமணி நேரங்கள் கடந்தது. அந்த பிரமாண்டமான கப்பல் சாதாரண பனிப் பாறையில் மோதி நிலை குலைந்து பல ஆயிரக்கணக்கானவர்கைளின் உயிரை பலி வாங்கியது.
ஆம் அருமை நண்பர்களே இந்த உலகத்துக்கு ஒரு முடிவு உண்டு, ஒரு நியாயத்தீர்ப்பு உண்டு. அந்தக் கப்பல் விபத்தில் முதல் வகுப்பிலிருந்த வசதி படைத்தோர் மீட்பு படகினால் பாதுகாக்கப் பட்டதுபோல, இந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ்கிறவர்கள் இயேசுவினால் பாதுகாக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இந்த உலகத்தில் விபச்சாரத்திலும், வேசிதனதிலும், குடி வெறியிலும், அசுத்ததிலும் வாழ்பவர்கள் அந்த கப்பலிலிருந்த அநேகர் கடலில் மூழ்கி அழிந்து போனது போல அக்னிக்கடலில் அழிந்து போவார்கள்.
நோவாவின் நாட்களில் பேளையினால் சிலர் காப்பாற்றப் பட்டனர். லோத்துவின் நாட்களில் மலையின் மேல் போய் சிலர் காப்பாற்ற பட்டனர். இன்றய நாட்களில் அந்த பேளையாகவும், கன்மலையாகவும் இயேசு இருக்கிறார். அவரை ஏற்று கொள்கிறவர்களுக்கு இரண்டாம் மரணமில்லை.
II பேதுரு 3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment