Saturday, April 10, 2010

இன்று ஒரு கேள்வி – 2

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 2


முதல் நூற்றாண்டின் எழுப்புதலுக்கு காரணம் பவுலா? பேதுருவா? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் கட்டுரையாக எழுதி அனுப்பலாம்.


1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 16.04.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சலில் வெளியிடப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

மார்ச் 27 அன்றைய இன்று ஒரு கேள்வி - 1 க்கான சரியான விடைகள்.


1 . பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் தேவன், கர்த்தர், ஆண்டவர், பிதா என்று ஒரு முறை கூட வராத புத்தகங்கள் எத்தனை உள்ளன? அவை யாவை?


இரண்டு புத்தகங்கள் உள்ளன. அவை,


1 .
எஸ்தரின் சரித்திர புஸ்தகம், 2 . உன்னதப் பாட்டுகளின் புஸ்தகம்.


2 .
பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசு என்று ஒரு முறை கூட வராத புத்தகங்கள் எத்தனை உள்ளன? அவை யாவை?


ஒரே ஒரு புத்தகம்.


III
யோவான்.


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment