இயேசுவுக்கே மகிமை
நில்
யாக்கோபு 4:7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
நாம் அனுதினமும் சாலைகளில் போகும்போது போக்குவரத்து போலீசாரை பார்க்கிறோம். சாதாரண ஒரு மனுஷன், ஆனால் மிகப்பெரிய பாரம் ஏற்றி வரும் மிகப்பெரிய லாறி கூட, இவர் தன்னுடைய கையில் வைத்துள்ள "நில்" என்ற போர்ட் - ஐ காண்பிக்கும் போது நிற்கிறது; காரணம் என்ன தெரியுமா? அவர் சாதாரண மனிதனாய் இருந்தாலும், அவருக்கு பின்னால் மிகப்பெரிய ஒரு போலீஸ் டிப்பார்ட்மென்றும் அதோடு கூட தமிழக அரசும் உள்ளது. ஆகவே அந்த மனிதனுடைய கட்டளைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கீழ்ப்படிகிறார்கள்.
அதுபோலவே கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே, நாமும் சாதாரண மனிதர்களாய் இருந்தாலும், நமக்குப் பின்னால் ஆயிரம், பதினாயிரம் தேவ தூதர்களும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவும் மற்றும் முழு பரலோகமும் நமக்கு துணை நிற்ப்பதால், நாம் பிசாசை பார்த்து இயேசுவின் நாமத்தில் அப்பாலே போ சாத்தானே என்று சொன்னால் அது அப்படியே நமக்கு கீழ்ப்படியும்.
நாம் மண்பாண்டமாய் இருந்தாலும் நமக்குள் இருப்பதோ, ராஜ முத்திரை! நாம் சாதாரண மனிதர்களாய் இருந்தாலும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அபிஷேகமோ ராஜரீக் அபிஷேகம். ஆகவே பிசாசோ, மந்திர தந்திரங்களோ நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
எபேசியர் 4:27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment