இயேசுவுக்கே மகிமை
பயணிகளின் கனிவான கவனத்திற்கு
வண்டி எண் 777 பூமி டு பரலோகம், தேவ லோக எக்ஸ்பிரஸ் நடை மேடை 1 லிருந்து இன்னும் சில மணி நேரத்தில் புறப்பட தயாராக உள்ளது.
வளி : இந்த ரயில் பூமியிலிருந்து புறப்பட்டு மத்திய ஆகாயத்தை சென்றடைகிறது. அங்கு டீ, காபி குடிப்பதற்கு சுமார் ஏழு ஆண்டுகள் நிறுத்தப் படுகிறது. அங்கிருந்து புறப்படுகிற ரயில் மீண்டும் இந்த பூமியை வந்தடைகிறது. இங்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் சாப்பிடுவதற்காக நிறுத்தப்படும்.
ஆயிரம் ஆண்டுகள் முடிந்தவுடன் பயணிகளுடைய டிக்கெட் பரிசோதிக்கப் படும். இந்த டிக்கெட்டுகள் தற்போது பூமியிலுள்ள எல்லா ஆவிக்குரிய தேவாலயங்களிலும் இரட்சிப்பு என்கிற பெயரில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதைப்பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுகள் எல்லா கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் பைபிள் என்கிற பெயரில் மிக குறைந்த விலையில் விற்க படுகிறது.
டிக்கெட் பரிசோதனை முடித்த பின், மீண்டும் இந்த ரயில் பரலோகத்தை சென்றடைகிறது. அங்கு நித்திய இளைப்பாறுதலுக்காக நிறுத்தப்படுகிறது.
(மேற்கண்ட ரயிலில் மோட்ச பிரயாணிகள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். நரகம் செல்ல வேண்டிய பயணிகள் நடை மேடை 2 இல் உள்ள வண்டி எண் 666 அக்னி கடல் எக்ஸ்ப்ரஸில் ஏறும் படி வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.)
வண்டி எண் 777 ன் வாசலின் அகலம் இடுக்கமானது. ஆகவே கடைசி நேர சிரமத்தை தவிர்க்கும் படி சீக்கிரமாய் ரயிலில் ஏறும்படி பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரயிலை பயணிகள் தவற விட்டால் திருச்சபயாகிய நிர்வாகம் பொறுப்பல்ல. சிரமத்துக்கு மன்னிக்கவும்.
மத்தேயு 7:14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
லூக்கா 13:24 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.
No comments:
Post a Comment