Thursday, April 29, 2010

பனையைப் போல

இயேசுவுக்கே மகிமை

பனையைப் போல

சங்கீதம் 92:12 நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

சங்கீதக்காரன் நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதம் எப்படியிருக்குமென சொல்லும்போது, பனையைப் போல செழித்து வளருவான் என்று கூறுகிறார். ஏன் அவர் பனையைப் ஒப்பிட்டு சொல்லியிருப்பார் என்றால் பனை மணற்ப்பாங்கான இடத்தில் வளரும். மட்டுமல்ல பனை மரத்திற்கு யாரும் தண்ணீர் ஊற்றியோ அல்லது உரமிட்டோ வளர்ப்பதில்லை. அது இயற்கையாகவே தேவன் வைத்துள்ள சூரிய வெளிச்சத்தைக்கொண்டு அது தானாகவே செழித்து வளரும். அது மற்ற எந்த ஒருவருடைய தயவையும் நாடி அல்லது கை ஏந்தியும் நிற்பதில்லை.

பிரியமானவர்களே நாமும் பரிசுத்தமாய் வாழ்ந்து, நீதிமான் என்ற பாக்கியத்தைப் பெற்றால் நாமும் யாருடைய தயவையும் நாடவேண்டியதில்லை, யார் முன்பும் கை கட்டி நிற்க வேண்டியதுமில்லை. பரிசுத்த வேதம் கூறுகிறது, ஏசாயா 60:3 உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள் என்று. ஆம் யோசேப்பு, தானியேல் போன்றோர்களுடைய தயவு ராஜாக்களுக்கு தேவைப்பட்டதேயொழிய, இவர்கள் ராஜாகளுக்கு முன்பு கைகட்டி நிற்கவில்லை. யாருமே நமக்கு உதவி செய்யாவிட்டாலும், ஒரு வேளை சூரியனும், சந்திரனும் கூட நம்மை மறந்து போனாலும் கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்.

ஏசாயா 60:19 இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

ஏசாயா 60:20 உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

உங்கள் யாவருக்கும் எங்கள் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

இந்த நல்ல நாளில் ஆண்டவராகிய இயேசு தாமே பரத்திலிருந்து நமக்கு ஒத்தாசை அனுப்பி, நாம் செய்யும் வேலையை சிறப்பாகவும், நேர்த்தியாகவும் யாரும் குறை கண்டுபிடிக்க முடியாதவண்ணம் செய்ய வேண்டிய ஞானத்தையும், புத்தியையும், அறிவையும் தேவையான சரீர சுகத்தையும், தெவீக சமாதானத்தையும் நமக்கு தருவாராக!

தேவன் நம்மை வற்றாத நீரூற்றைப்போலவும், பரவிபாய்கிற ஆறுகளைப்போலவும், பூத்துக்குலுங்கும் வளமிக்க தோட்டத்தைப்போலவும் ஆசீர்வதிப்பாராக!

உபாகமம் 28:12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்,

&

இ.ஒ.த.வே.வி.குழு.

அவசர உதவிக்கு பரலோக தொலைபேசி எண்கள்

இயேசுவுக்கே மகிமை

அவசர உதவிக்கு பரலோக தொலைபேசி எண்கள்

Ph.No: 1-19-50-15

சங்கீதம் 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை (இயேசுவை) நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப் படுத்துவாய்.

Ph No: 1-19-20-01

சங்கீதம் 20:1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

Ph No: 1-19-91-15

சங்கீதம் 91:15. அவன் என்னை(இயேசுவை) நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

Ph No: 1-24-03-33

எரேமியா 3:3. என்னை (இயேசுவை) நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்,

நமக்கு உபயோகமான சில கிறிஸ்த்தவ இணையதளங்கள்

http://twitter.com/vethamvilakkam

www.jebam.com

http://www.tamilchristiannet.com/

acaprayerhouse.org

www.nlm-tv.com

http://twitter.com/tamilbible

http://www.tamil-bible.com/

http://www.sampauls.webs.com/

http://www.odmchurch.de/

http://calvarytabernacle.in/Web_Page_Model_4/2009_Sermons.html

http://www.jesusholly.blogspot.com/

http://www.christianfmradio.com/

http://www.zionmedia.in/

http://www.tamilchristians.com/

http://www.healingfacts.org

http://www.wbtc.com/site/PageServer

எதிர்நீச்சல்

இயேசுவுக்கே மகிமை

எதிர்நீச்சல்

லேவியராகமம் 11:9 ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

லேவியராகமம் 11:10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

பரிசுத்த வேதாகமத்தில், தண்ணீரில் நீந்துகிற ஜீவ ஜந்துக்களில் (மீன்களில்) புசிக்கத்தக்கது எது, புசிக்க தகாதது எது என்று மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது சிறகும், செதிளும் உள்ள எல்லா மீன்களும் புசிக்க தகுந்தது. சிறகும் செதிளும் இல்லாத மீன்கள் புசிக்க தகாதது, மட்டுமல்ல இவைகள் அருவருப்பானவைகள். இந்த இரண்டு வகையான மீன்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன.

சிறகுள்ள மீன்களால் யோர்தான் நதி கரைபுரண்டோடினாலும், எதிர் நீச்சல் அடித்து தடைகளை தாண்டும் குணாதிசயம் உண்டு. எனவே இவைகளால் ஆழமான பகுதிகளிலும், தண்ணீரோட்டம் உள்ள பகுதிகளிலும் இலகுவாய் வாழ முடியும். ஆனால் சிறகும், செதிளும் இல்லாத மீன்களால் எதிர் நீச்சலிடிக்க முடியாது. எனவே இவைகள் தண்ணீரோட்டம் இல்லாத, ஆழமற்ற கரைபகுதிகளில் உள்ள சேற்றில் மறைந்து வாழ்ந்து, அந்த சேற்றில் உள்ள அசுத்தங்களை உண்டு உயிர் வாழ்கின்றன.

மேற்கண்ட இரண்டு விதமான மீன்களையும், இந்த உலகத்தில் வாழுகின்ற மனிதர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், சிறகும் செதிளும் உள்ள மீன்கள் எதிர் நீச்சல் அடிப்பது போல ஒரு சிலர் கிறிஸ்தவ வாழ்கையில் எவ்வளவு தடைகள் வந்தாலும், கிறிஸ்த்துவின் துணையோடு கூட ஜெயித்துவிடுவார்கள். இவர்கள் மாம்ச இச்சைகளுக்கு அடிபணிந்து போய் விபசார, வேசிதனங்களுக்கு, குடி வெறிக்கு அடிமைபட்டு போகமாட்டார்கள். காரணம் இவர்கள் சொந்த பலத்தை நம்பாமல் கர்த்தருடைய ஆவியானவரின் ஆளுகைக்கு தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள். எனவே ஏசாயா 59:19 வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.

ஆனால் சிறகும், செதிளும் இல்லாத மீன்களால் எத்ர்நீச்சலடிக்க முடியாதது போல, ஒரு கூட்டத்தார் கர்த்தரை தங்கள் நம்பிக்கையாக கொள்ளாமல் பாவமாகிய விபசார, வேசிதனங்களையும், குடி வெறியையும் ஜெயிக்க முடியாதவர்கள். இவர்கள், அந்த மீன்கள் சேற்றில் வாழ்ந்து அதிலுள்ள அசுத்தங்களை உண்டு வாழ்வது போல, இந்த உலகத்தின் சிற்றின்பங்களிலும், அசுத்த பாவங்களிலும் வாழ்பவர்கள். இவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் பார்வையில் அசுத்தமும், அருவருப்புமானவர்கள்.

ஒரு சிலர் குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஆண்டவரை மறுதலித்து தோற்று போனவர்கள் உண்டு. ஆனால் ஆபிரகாம், அன்னாள் போன்றவர்கள் எதிர் நீச்சலடித்து வெற்றிபெற்றார்கள்.

ஒரு சிலர் தாங்க முடியாத வியாதியினிமித்தம் தோற்று போனவர்கள் உண்டு. ஆனால் யோபு, எசேக்கியா ராஜா போன்றோர் தங்கள் வியாதியோடு போராடி ஜெயித்தார்கள்.

இன்னும் சிலர் திருமண வாழ்வில் வந்த தோல்விகளினிமித்தம் இயேசுவை மறுதலித்து தோற்று போனவர்கள் உண்டு, ஆனால் மோபாவிய பெண்ணாகிய ரூத்தோ தன கணவன் மரித்து போய் நம்பிக்கையில்லாத சூழ்நிலையிலும், இஸ்ரேலின் தேவனாகிய கர்த்தரை சார்ந்து கொண்டதினிமித்தம், போவாஸ் என்னும் ஆத்ம மணாலனால், நேச போர்வையால் மூடப்பட்டாள்.


அந்நிய தேசத்தில் அடிமைப்பட்டுப் போன யோசேப்பும், தானியேலும் சிறைச்சாலையிலும், சிங்கக் கெபியிலும் அடைக்கபட்டலும், அவர்களுக்கு தேவனாகிய கர்த்தர் மேலிருந்த விசுவாசமும், அன்பும் குறைந்துபோகவில்லை. ஆம் ஆகவே தான் அவர்கள் வரலாற்றிலும், வேதாகமத்திலும் என்றும் நீங்கா இடம்பெற்றனர்.


பரலோக ராஜ்யம் தோற்று போனவர்களின் சங்கமம் அல்ல, அது ஜெயம் பெற்றவர்களின் கூட்டம். பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேசத்தில் மட்டும் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட முறை ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ என்று சொல்லப்பட்டுள்ளது. பரலோக ராஜ்யம் தரிசு நிலமாய் போனாலும் பாவியான ஒரு மனுசனை அங்கீகரிக்காது. வேதாகமத்தில் தோற்று போனவர்களின் பெயர்களை உச்சரிக்க கூட அது வெட்கபடுகிறது. அதாவது லோத்தின் மனைவி, யோபுவின் மனைவி என்று எழுதப்பட்டுள்ளதே தவிர, அந்த பெண்மணிகளின் பெயரை வேதாகமம் உச்சரிக்கவில்லை. ஏழை லாசருவின் பெயரை வெட்கபடாமல் எழுதிய வேதாகமம்; ஐஸ்வர்யவானை, ஐஸ்வர்யவான் என்ற புனை பெயரோடு தான் அழைத்ததே தவிர அவனுடைய பெயரை வேதாகமம் மறந்து போனது. ஆம் பிரியமான நண்பர்களே நாம் பரிசுத்தமாய் வாழ்ந்தால் தேவன் தன்னுடைய பொற்கரத்தால் நம்முடைய பெயர்களை ஜீவ புஸ்தகத்தில் எழுதிடுவார். நாம் பாக்கியம் பெற்றவர்களாய் மாறிடுவோம்.

ஆகவே எனதருமை நண்பர்களே நாம் இயேசுவை போல பரிசுத்தமாய் வாழ நம்மால் இயன்ற வரை பாடுபடுவோம். இதை எழுதுகிற எனக்கும், இதை வாசிக்கிற உங்களுக்கும் தேவன் பரிசுத்தமாய் வாழ வேண்டிய கிருபைகளை தருவாராக!

II கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

வாசகர் கருத்து

இயேசுவுக்கே மகிமை


வாசகர் கருத்து

கிறிஸ்த்துவுக்குள் அன்பு சகோதர, சகோதரிகளே, அருமை நண்பர்களே!


அரசர்களுக்கெல்லாம் அரசரும், ராஜாக்களுக்கெல்லாம் ஆண்டவருமாகிய மாவேந்தன் இயேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!


நமது இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் பற்றிய நமது அன்பு சகோதரர்களின் கருத்துக்கள்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Can u let me know about your self.

If you have list of : information for day” details send it to me, so that I can include them while preparing messages.

May god bless your handworks, family & Handworks abundantly

-------------------------------------------------

Dear brother / sister in Christ,

Below information is useful to me. Can u send me more details like these if u have.

God bless u

-----------------------------------------------

thanks you for this wonderful serice..

do contine to send me mails ....

கலக்கிட்டீங்க. தேவனுக்கு பெருமை உண்டாகட்டும்.

அன்புள்ள நண்பனே

தங்களின் அன்றாட மன்னவால் என் ஆத்துமா புதிப்பிக்க படுகிறது.

தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின்

Dear Brother

Thank you very much for your daily prayer

from & Family

Fantanstic Mr.

All Glory be to God!

Regards,

மிகவும் நன்று.

இந்த படைப்பைக் கண்டு நான் திகைத்து நிற்கிறேன்.

இது உங்களுடைய தியான வெளிப்பாடா?

Hi,

May i know who is this Organiser.


Hallo friend

I am . I do not know who is the sender of this mail. But the thoughts that you give remains food for the soul.
Thank you very much for sending such useful and beautiful messages. Keep continuing.
May God bless you.

regards

Hello

would you send your biblican exploration to me? usage of better tamil is prefered. god bless you.

Anbudan

i would like to really thank you for all the wonderful reflections and
the explanations of the Word..

thank you so much...

திரு. தேவனின் எழுதுகோல் அவர்களே!

இந்த கருத்து மிகவும் அருமையானது.

தங்களின் செய்திகள் அனைத்தும் பரிசுத்தத்தையே சுற்றி வருவது எனக்குப் பிடித்திருக்கிறது. நாம் தேவனுக்குப் பயன்படுவதைவிட "மறுரூபம் அடைவதே பிரதான அழைப்பு அல்லவா?" அது மட்டுமல்லாமல் இந்த கோணலும் மாறுபாடுமான கொடிய உலகத்தில், பரிசுத்தத்தை காத்து வாழ்வது ஒரு போராட்டம்தான். தேவனோடு நெருங்கிப் பழகும் மனிதன் ஒருவனின் default பேச்சு, தேவனுக்குப் பிரியமாய் வாழ்வதைப்பற்றியே இருக்கும். இதையே "நாம் அவருக்குப் பிரியமாய் வாழ்ந்தால் அவர் நம்மைவிட்டு பிரிய மாட்டார்" என்று தந்தை.பெர்க்மான்ஸ் கவிதை நயத்தோடு கூறுகிறார்.

கீழ்க்கண்ட உங்களது இந்த தியானத்தில், குளிராய் இருப்பது பற்றி கூறியுள்ளீர்கள்:

நமது ஆவிக்குரிய உலகத்தில் "நீங்கள் அனலாயிருக்கிறீர்களா? அல்லது குளிர்ந்து போயிருக்கிறீர்களா? என்று கேட்பதும், பிரசங்கிப்பதும் வழக்கமாயிருக்கிறது." குளிர்ந்து போயிருப்பது என்பது வளர்ச்சி குன்றிய ஆன்மீக வாழ்க்கையைக் குறிப்பதாக பேசப்படுகிறது. வசன அடிப்படையில் எது சரி?


அன்புடன்

Dear Brother,

May i know ur good name please?

Regards,


Dear Sir,

Greetings from P., Bangalore.

Please send me everyday this biblical inspiring thoughts. my mail id is
@rediffmail.com

Thank you

P.

Praise the Lord .thank for your grate massage.always i need thats.please sent to me contune.

With Love

----------------------------------

Wonderful!

-----------------------------------

Dear Brother,

The message & work is good.
I would like to know which brother is sending these mail to me?
Kindly show your identity to me.

Have a nice day.

Best regards,

thanks once again...

i have inspired my friends too, to have a love for this "Vethamum Vilakkamum.."

they will be getting your help...

i will try to inspire many...or rather it is not I,,,But the "Word"

Praise the LORD .Thank you ,I recieved many many useful massage from you.

With Love

-------------------------------------------------------------------

Dear Writer.......

Greetings to u in the name of Jesus.........

Iam Happy for the mails you have been sending............

Thank you,

Let Gods Blessing be with you and your family........

Glory to God......

Hello Writer

Don’t write according to your won word. You are not. People are thinking they are God. If you want to money work and get it. Just in the name of God don’t cheat the people.

What you mentioned here the words from old testament. That time God was as word and light, he was not human, but God came to in this world as a human, it is a new testament. God’s says that don’t worship like birds and other abnormal things. O.k. He didn’t say don’t worship my. When we worship him, only we have in our mind in the name of our lord not any evil sprit. Please understand that. Stop it to criticize the Catholics. We are the original God’s children, you all are Bahal children, that is why always disturbing others

God bless you

-------------------------------------------------------

Praise the Lord .

Thank you for your wonderful massage.I need more and more.

i am always prayer for your ministry

With LOve

--------------------------------------------------------------------------

Dear in CHRIST

Thank You for your mail. Please pray for me and all Saints of the world.

Keep in Touch.

Then said Jesus to them again, Peace be unto you: as my Father hath
sent me, even so send I you. (John 20:21)

-----------------------------------------------------------------------------------------------

Dear Brother,

Excellent job you are doing.

I get lots of doubts answers from ur messages.

May God bless you with lots of wisdom, health and wealth.

Good work...Please continue...

Regards,

Muthu Kumar

-----------------------------------------------------------------------

PRAISE THE LORD

Hi brother iam getting message from u everyday.It is useful for me.please send the below mail id:

Hi There,

I have received your mail. The heading “ மரித்துப்போன புனிதர்கள் அற்புதம் செய்ய முடியுமா?” I’m Strongly contrasting it.

அந்தோணியாரிடம் கேட்கும்படி எனக்கு சொல்லித் தருவார்கள் என்னுடைய அம்மா

During your childhood, your mother is the one who shows you who is your father. You have grownups and your technologies changed. But still you believe your father is same isn’t it?

As all we are on end of the world. It is very clearly mentioned in the Holy Bible says “People like you” (Anti Christ) can raise & they have power to clear the illness. They are look like Holy. It is your choice to choose the right one. That is what happening in the Christianity right now.

If you wish to earn by the name of “Jesus Christ” just do your business. Don’t finger out any Holy People.

-------------------------------------

Dear Sir,

Thank you very much for your prayer. i want more tamil prayers and methods to pray to god. i am waiting for your reply.

From

மிகவும் அருமை சகோதரரே...

நல்ல ஒரு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்..

தேவன் தாமே உங்களை மேலும் அதிக வல்லமையாய் பயன்படுத்துவாராக..

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...

தொடரட்டும் உங்கள் ஊழியங்கள்..

அன்பு சகோதரன்,

இன்றைய உங்களது செய்தி எனது அனுதின ரேமா வார்த்தையுடன் ஒன்றிப்போனது கண்டு கர்த்தரைத் துதித்தேன்.

ஆண்டவருக்காக ஓடுவதைக்காட்டிலும் அவர் பாதத்தில் உட்காரவேண்டும் என்ற கருத்துச் சார்புடையவன் நான். அதுவே நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்கு!

ஆண்டவருக்காக எதையாவது செய்யவேண்டும் என்றல்ல; செய்யவேண்டியதை முதலில் செய்ய வேண்டும்!

நவீன கால மிஞ்சின விசுவாசிகளாய் அல்ல; தேவனிடம் கொஞ்சும், கெஞ்சும் பிள்ளைகளாய் இருப்பதில்தான் அவரை திருப்திப்படுத்த முடியுமென்று நம்புகிறேன்.

எனவே தங்களது "இன்று ஒரு தகவல்" பகுதி அதிகமதிமாய் ஜெப நனைந்து, ஆவியில் நிறைந்து அநேகரைத் தொட்டுகொண்டிருக்கிறது என்பதை நன்கு அறிவேன்.

அந்த வகையில் இது இன்னும் ஒரு பரிணாமத்தில் "தீர்க்கதரிசன" தொனியாக ஒலிக்க எனது ஜெபங்களையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்!

நில்

இயேசுவுக்கே மகிமை

நில்

யாக்கோபு 4:7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

நாம் அனுதினமும் சாலைகளில் போகும்போது போக்குவரத்து போலீசாரை பார்க்கிறோம். சாதாரண ஒரு மனுஷன், ஆனால் மிகப்பெரிய பாரம் ஏற்றி வரும் மிகப்பெரிய லாறி கூட, இவர் தன்னுடைய கையில் வைத்துள்ள "நில்" என்ற போர்ட் - ஐ காண்பிக்கும் போது நிற்கிறது; காரணம் என்ன தெரியுமா? அவர் சாதாரண மனிதனாய் இருந்தாலும், அவருக்கு பின்னால் மிகப்பெரிய ஒரு போலீஸ் டிப்பார்ட்மென்றும் அதோடு கூட தமிழக அரசும் உள்ளது. ஆகவே அந்த மனிதனுடைய கட்டளைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கீழ்ப்படிகிறார்கள்.

அதுபோலவே கிறிஸ்துவுக்குள் பிரியமான நண்பர்களே, நாமும் சாதாரண மனிதர்களாய் இருந்தாலும், நமக்குப் பின்னால் ஆயிரம், பதினாயிரம் தேவ தூதர்களும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவும் மற்றும் முழு பரலோகமும் நமக்கு துணை நிற்ப்பதால், நாம் பிசாசை பார்த்து இயேசுவின் நாமத்தில் அப்பாலே போ சாத்தானே என்று சொன்னால் அது அப்படியே நமக்கு கீழ்ப்படியும்.

நாம் மண்பாண்டமாய் இருந்தாலும் நமக்குள் இருப்பதோ, ராஜ முத்திரை! நாம் சாதாரண மனிதர்களாய் இருந்தாலும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அபிஷேகமோ ராஜரீக் அபிஷேகம். ஆகவே பிசாசோ, மந்திர தந்திரங்களோ நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

எபேசியர் 4:27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

இன்று ஒரு கேள்வி – 4

இயேசுவுக்கே மகிமை

இன்று ஒரு கேள்வி – 4

சங்கீதம் 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். மேற்கண்ட வசனத்தின்படி பூமி மாத்திரமே மனுஷனுடைய குடியிருப்புக்காக தேவன் நியமித்திருக்கிறார். ஆனால் விஞ்ஞானிகளோ சந்திரனில் மனிதன் வாழ முடியுமென கருதி அங்கு குடியிருப்புகளை கட்ட முயற்சிக்கிறார்கள். இது சத்தியமா? மனிதன் சந்திரனில் வாழ முடியுமா? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.


1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.04.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

17.04.2010 அன்றைய ன்று ஒரு கேள்வி 3” க்கான சரியான விடைகள்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து வெளிப்படுத்தின விசேஷத்தில் தன்னைக் குறித்து சொல்லும் போது நான் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறேன் என்றார். அவர் எதைக் குறிக்கும் படி அப்படிச் சொன்னார்?

பரிசுத்த வேதாகமத்தில் சில இடங்களில் ஆவியானவர், சில விஷயங்களை சற்று வித்தியாசமாக நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இஸ்ரேலை காக்கிற தேவன் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை என்று ஒரு வசனமுண்டு. இதில் தூங்குவதும், உறங்குவதும் ஒன்று தான். அது போல வட்டிக்கு கொடாமலும், பொலுசை வாங்காமலுமிருப்பயாக என்றொரு வசனமுண்டு. இதில் வட்டி என்பதும், பொலுசை என்பதும் ஒன்றே.

அதுபோலவே இயேசு தன்னைக் குறித்து சொல்லும்போது நான் அல்பாவும், ஒமேகாவும், ஆதியும், அந்தமுமாயிருக்கிறேன் என்றார். அதாவது அல்பாவும், ஒமேகாவும் என்பதை தான் மீண்டும் ஆதியும், அந்தமும் என்று சொன்னார். ஆங்கிலத்தில் முதல் எழுத்து A , கடைசி எழுத்து Z , அதுபோல கிரேக்க மொழியில் அல்பா என்பது முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. துவக்கமும், முடிவும் அல்லது ஆதியும், அந்தமும் நானே என்பதை குறிக்கும் படி அப்படி சொன்னார்.

கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

Friday, April 23, 2010

கழுகுகளை போல உயர உயர பறப்போம்

இயேசுவுக்கே மகிமை

கழுகுகளை போல உயர உயர பறப்போம்

ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

இன்றைய நவீன உலகம் மிகவும் பரபரப்பான உலகம். காத்திருப்பது என்பது மிக மிக கடினமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ என்று. ஆம் இன்று பல விதமான காத்திருப்புகள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று கர்த்தருக்கு காத்திருப்பது. இன்று நாம் கர்த்தருக்கு காத்திருக்க மறந்து போகும்போது, கர்த்தரும் நம்மை மறந்து போகிறார். இதினிமித்தம் நாம் மருத்துவமனைகளில், நீதிமன்றங்களில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகிறது. எனவே நாம் தேவ சமுகத்தில் காத்திருப்பது மேன்மையான அனுபவமாகும்.

சங்கீதம் 103:5 கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.

கழுகின் ஆயுள்நாட்கள் சுமார் 300 ஆண்டுகள். இவ்வளவு நீண்ட நாட்கள் அது வாழ்வதற்கு ஒரு ரகசியத்தை அது அறிந்து வைத்துள்ளது. அதாவது பல ஆண்டுகள் வாழ்ந்தவுடன் அதற்கு முதுமை ஏற்படுகிறது. உடனடியாக அது மிகப்பெரிய கன்மலை உச்சியில் போய் அமர்ந்து, தன்னுடைய பழைய ரக்கைகளை பாறையின் மேல் அடித்து உதிர்த்து விட்டு, அந்த கன்மலையின் மேல் சில மாதங்கள் காத்திருக்கிறது. அப்பொழுது அதனுடைய தேவையற்ற கொழுப்புகள் கரைந்து போகிறது. அதே வேளையில் அதற்கு புதிய சிறகுகள் முளைத்து அது ஒரு இளம் கழுகாக மாறுகிறது. இப்போது அதற்கு ஒரு புதுபெலன் உண்டாகிறது, எனவே அது தன் செட்டைகளை அடித்து உயரே எழும்பி பறக்கிறது. அந்த கழுகு எங்கே காத்திருந்தது தெரியுமா? கன்மலையின் மேல் காத்திருந்தது. அந்த கன்மலை எதைக் குறிக்கிறது. I கொரிந்தியர் 10:4 எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. ஆம் அருமை நண்பர்களே நாமும் கன்மலையாகிய கிறிஸ்த்துவின் பாதத்தில் காத்திருக்க கற்றுக்கொள்வோம்.

உபாகமம் 32:11 கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

கழுகானது முட்டையிடுவதற்கு முன்பு நேர்த்தியாக கூடு கட்டும் ஞானமுள்ள ஒரு பறவை. நல்ல கடினமான காய்ந்த மரத்தின் கம்புகளால், கூடு கட்டி அதன் மேல் முட்களால் ஆன ஒரு அடுக்கு. அதன்மேல் பழைய துணிகள் அல்லது மென்மையான ஒரு அடுக்கு. அதன் மேல் தன்னுடைய மென்மையான சில இறகுகள் வைத்து அழகாக கூடு கட்டி அதிலே முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கிறது. சிறு குஞ்சுகள், தாயினுடைய அரவணைப்பிலும், அதனுடைய பராமரிப்பிலும் பஞ்சு போன்ற கூட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறது. வேளா வேளைக்கு தாய் பறவை அதற்கு உணவு ஊட்டுகிறது. குஞ்சுகளுக்கு எந்த கவலையுமில்லை.

நாட்கள் செல்லுகிறது, குஞ்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கிறது. தாயினுடைய பராமரிப்பால் குஞ்சுகள் கொழுத்து வளருகிறது. எனவே குஞ்சுகள் அதிக எடையுள்ளதாக காணப்படுகிறது. அப்பொழுது தாய் பறவை ஒன்றை புரிந்து கொள்ளுகிறது, இப்படியே நாம் விட்டுவிட்டால் குஞ்சுகளால் பறக்க முடியாது , எனவே அவைகள் சொந்தமாக தனக்கு வேண்டிய ஆகாரத்தை தேடிக்கொள்ள முடியாது என்று.

எனவே அது குஞ்சுகளுக்கு கொடுக்கும் ஆகாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக குறைக்க ஆரம்பிக்கிறது. குஞ்சுகளுக்கு பசிக்க ஆரம்பிக்கிறது. இவ்வளவு நாட்கள் சொகுசாய் வாழ்ந்த குஞ்சுகள் சிரமப்பட ஆரம்பிக்கிறது. இப்போது தாய் கழுகு அந்த கூட்டின் மேல் வைத்திருந்த தன்னுடைய மென்மையான இறகுகளை எடுத்துவிடுகிறது. குஞ்சுகளுக்கு இன்னும் சற்று வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கிறது. மீண்டும் தாய் கழுகு அந்த பழைய துணிகளை எடுத்து விடுகிறது, அதோடு கூட அவைகளுக்கு கொடுக்கும் ஆகாரத்தை இன்னும் குறைக்கிறது. இப்போது குஞ்சுகளை அந்த கூட்டினுடைய முட்கள் குத்த ஆரம்பிக்கிறது, பசிக்கொடுமை வேறு, குஞ்சுகள் அப்பொழுது நினைக்கும் அவ்வளவு தான் தங்களுடைய வாழ்க்கை முடியப் போகிறது என்று. ஆனால் நடப்பது என்ன தெரியுமா? அந்த நாட்களில் அந்த குஞ்சுகளுடைய எடை குறைந்து, அவைகள் பறப்பதற்கு உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது அந்த குஞ்சுகள் பசியின் கொடுமையால், கொஞ்சம் கொஞ்சம் பறக்க முயற்சிக்கிறது. அப்போது தாய் பறவை தன்னுடைய சிறகுகளின் மேல் அந்த குஞ்சுகளை சுமந்து கொண்டு பறக்கிறது. இப்போது குஞ்சுகளுக்கு இது ஒரு உன்னத அனுபவமாக இருக்கிறது, இதனால் மீண்டும் அந்த குஞ்சுகளுக்கு ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. ஆம் குஞ்சுகளுக்கு விமானத்தில் பறப்பது போன்ற ஒரு அனுபவம். இதுவும் அதிக நாள் நீடிப்பதில்லை. தாய் கழுகு மிக அதிக உயரத்தில் பறந்து, திடீரென தன் சிறகின் மேல் உள்ள சிறு கழுகை கீழே விட்டு விடுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஞ்சு ஐயோ! செத்தேண்டா என்று கதறும். ஆனால் தாய்ப் பறவை மிக அதிவேகமாக கீழே பறந்து வந்து அந்த சிறு கழுகு கீழே விழுந்து விடாதபடி தன் சிறகுகளின் மேலே தாங்கிகொள்ளும். இப்படியாக அது மீண்டும் மீண்டும் செய்ய அந்த சிறு கழுகு தன் பயம் நீங்கி பறக்க கற்று கொள்ளுகிறது. ஆம் அது தன் செட்டைகளை அடித்து உன்னதத்தின் உயர் ஸ்தலத்தை நோக்கி உயர, உயர பறக்க ஆரம்பிக்கிறது.

எனதருமை நண்பர்களே கிறிஸ்தவர்களாகிய நமக்கும் கூட பாடுகள், உபத்திரவங்கள் வரவில்லை என்றால் நாமும்
T .V
யே கதி என்று அதன் முன்பே அமர்ந்து விடுவோம். ஆனால் பாடுகள், உபத்திரவங்கள், வேதனைகள் வரும்போதுதான் நேரம் கிடைக்காவிட்டாலும் எப்படியாகிலும் நேரத்தை உருவாக்கி தேவ சமுகத்தில் அமருவோம். ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு தேவன் பாடுகளை அனுமதிக்கிறார். அவனை உருவாக்கவே. பாடுகள் வருபோது தான் நாம் பரிசுத்தத்தை அடைய முடிகிறது. பாடுகளும், உபத்திரவமும் நம்மக்கு பறக்க கற்று தருகிறது. ஆம் உன்னதத்தை(இயேசுவை) நோக்கி உயர, உயர பறக்க நமக்கு கற்று தருகிறது.

A lovely song............

http://www.youtube.com/watch?v=xGPS8sa-bRQ&feature=related

When god drops you from the edge of the hill,

Do not hate him; He may not catch you,

But he will teach you how to fly.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.